திருமூலர் அருளிய திருமந்திரம்
6. பிரத்தியாகாரம்

மூன்றாம் தந்திரம் பாடல் 578–587 (10 பாடல்கள்)

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்பண்டுகந் தெங்கும் பழமறை தேடியைஇன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலத்தில்தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்கூவிக்கொண்டு ஈசன் குடியிருந் தானே.

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்றபாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்றகோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே.

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே.

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிருமேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திருவேலொத்த கண்ணை வெளியில் விழித்திருகாலத்தை வெல்லுங் கருத்திது தானே.

எருவிடும் வாசற் கிருவிரன் மேலேகருவிடும் வாசற் கிருவிரற் கீழேஉருவிடும் சோதியை உள்கவல் லார்க்குக்கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்பிரத்தியா காரப் பெருமைய தாமே.

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கேபுறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்அறிப்புறு காட்சி அமரரு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #578

1 / 10

0:000:00
6. பிரத்தியாகாரம்பாடல் 578

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com