தொடர்ந்து படிக்கread this section continuously
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்றபாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்றகோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.
உரைmeaning
மூலாதாரத்திலிருந்து இரண்டு அங்குலம் மேலும், பிறப்பு உறுப்பிலிருந்து இரண்டு அங்குலம் கீழும் உள்ள இடத்தில், வட்ட வடிவமாக இருக்கும் குண்டலினி சக்தியின் மையப்புள்ளி உள்ளது. அந்தக் குண்டலினி சக்தியிலிருந்து வெளிப்படும் செம்மையான ஒளி, தொப்புள் குழியிலிருந்து நான்கு அங்குலம் கீழே உள்ள இடம் வரை பரவியுள்ளது.
Two fingers'-breadth above the mūlādhāram, and two fingers'-breadth below the organ of birth, lies the round centre-point of the kundalini power. The ruddy light that streams out from that kundalini power spreads down to the place four fingers'-breadth below the hollow of the navel.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மூலாதாரத்திலிருந்து இரண்டு அங்குலம் மேல் நோக்கி நிற்பதும்,
That which stands two fingers' breadth above the mūlādhāram,
- வரி 2Line 2
பிறப்பு உறுப்பிலிருந்து இரண்டு அங்குலம் கீழ் நோக்கி நிற்பதுமான இடத்தில்,
and two fingers' breadth below the organ of birth,
- வரி 3Line 3
வட்ட வடிவமாக இருக்கும் குண்டலினியின் உள்ளிருந்து எழுகின்ற செம்மையான ஒளி,
there, the ruddy light rising from within the round-formed kundalini,
- வரி 4Line 4
உலகத்தில் வாழும் நமது உடலின் தொப்புளுக்கு நான்கு விரல் கீழே பரவியுள்ளது.
spreads, in this body that lives in the world, to four fingers' breadth below the navel.
திருமந்திரம் பாடல் #580





