தொடர்ந்து படிக்கread this section continuously
நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலத்தில்தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்கூவிக்கொண்டு ஈசன் குடியிருந் தானே.
உரைmeaning
தொப்புளுக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம் தொலைவில் உள்ள மூலாதாரத்தில் இருக்கும் ஓம் என்னும் மந்திரத்தை அறிந்தவர்கள் யாருமில்லை. அந்த ஓம் என்னும் மந்திரத்தை உணர்ந்துவிட்டால், அந்த மந்திர ஒலியாகவே இருக்கும் சிவபெருமானை நமக்குள் உணரலாம்.
There is no one who knows the mantra Om that dwells in the mūlādhāram, twelve fingers'-breadth below the navel. If that mantra Om comes to be sensed, Sivan, who himself is that mantra sound, can be sensed within us.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தொப்புளுக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம் தொலைவில் உள்ள இடத்தில்,
In the place twelve fingers' breadth below the navel,
- வரி 2Line 2
அங்கே தங்கியிருக்கும் ஓம் என்னும் மந்திரத்தை அறிந்தவர் யாருமில்லை.
no one has known the mantra Om that dwells there.
- வரி 3Line 3
அந்த ஓம் என்னும் மந்திரத்தை உணர்ந்துவிட்டால்,
Once that mantra Om is sensed,
- வரி 4Line 4
அந்த மந்திர ஒலியாகவே இருக்கும் ஈசன் நமக்குள் வந்து குடியிருப்பான்.
Isan, who himself is that mantra sound, comes and dwells within us.
திருமந்திரம் பாடல் #579





