தொடர்ந்து படிக்கread this section continuously
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்பண்டுகந் தெங்கும் பழமறை தேடியைஇன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.
உரைmeaning
வெளியே சென்று ஓடுகின்ற மனதை உள்ளே ஒரு நிலைப்படுத்தி வைத்தால், இறைவனுடைய பல்வேறு குணங்களை நமக்குள்ளே உணரலாம். அவ்வாறு மனதை உள்ளே ஒரு நிலைப்படுத்தி வைத்திருந்தால், ஆதிகாலம் முதல் பழமையான வேதங்களைக் கற்றறிந்தவர்கள் தமக்குள் தேடிய இறைவனை, அப்பொழுதே நமக்குள்ளும் கண்டு உணரலாம்.
If the mind that runs outward is fixed in one place within, the many qualities of God can be sensed within us. If the mind is held so fixed within, the God whom those who studied the ancient Vedas from the earliest times sought within themselves can, that very moment, be found and sensed within us too.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மீண்டும் மீண்டும் உள்ளே திரும்பி மனதைக் கருத்துடன் ஒரு நிலைப்படுத்தி வைத்தால்,
If again and again the mind is turned inward and fixed there with attention,
- வரி 2Line 2
உள்ளே ஒரு நிலைப்படுத்தி வைத்தால் இறைவனின் பல்வேறு குணங்களைக் காணலாம்.
once it is held fixed within, the many qualities of God can be seen there.
- வரி 3Line 3
ஆதிகாலம் முதல் பழமையான வேதங்களைத் தேடி விரும்பியவர்கள் தேடிக்கொண்டிருந்த இறைவனை,
The God whom those who loved and sought the ancient Vedas from the earliest times went searching for,
- வரி 4Line 4
இன்று நாமும் நமக்குள்ளேயே கண்டு இருக்கலாம்.
that same God we too may today find and hold, right here within us.
திருமந்திரம் பாடல் #578





