திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 582

மூன்றாம் தந்திரம்6. பிரத்தியாகாரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே.

உரை

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தி தலை உச்சிக்குச் சென்றபின், பிரகாசமான ஒளி தோன்றி அந்த ஒளிக்கதிர் உடலெங்கும் பரவி பேரின்பம் கிடைக்கும் என்று மனதை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்யவேண்டும். தலை உச்சிக்கு நேராகக் கீழே இருக்கும் கழுத்தில் அந்த ஒளிக்கதிர் தெரியும் நிலையை அடைந்தால், அவ்வாறு தியானித்தவரின் உடல் தன்னை மறந்த நிலையில் பேரானந்தமாக இருக்குமென்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    ஒளியின் கோடாக, சுடர்மிக்க ஒளியாக அந்த ஒளி தோன்றினால்,

  • வரி 2

    குறையற்ற பரானந்தம் என்றே அதை நீங்கள் மனத்தில் குறித்துக்கொள்ளுங்கள்.

  • வரி 3

    தலை உச்சிக்கு நேராகக் கீழே இருக்கும் கழுத்தில் அந்த நிலவொளி வந்தடைந்தால்,

  • வரி 4

    அவ்வாறு தியானித்தவரின் உடல் தன்னை மறந்த நிலையில் இருக்குமென்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #582

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout