தொடர்ந்து படிக்கread this section continuously
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்பிரத்தியா காரப் பெருமைய தாமே.
உரைmeaning
பிரத்தியாகாரத்தின் மூலம் மிகவும் கடினத்துடன் மனதை ஒரு நிலைப்படுத்தி, கர்மாவினால் உண்டான உடலின் தொடக்கத்தையும் ஆன்மாவின் அறிவையும் பிரித்துப் பார்க்கும் திறனை அடைவதும், தனித்தனியாகப் பார்க்கும் பல இறை உருவங்களை மெல்ல மறந்து அறிவு வடிவாகிய ஒரே இறைவனை உணர்வதும், அந்த உணர்வினால் இறைவனின் மேல் அன்பு அதிகமாவதும், அவ்வாறு அதிகமாகிய அன்பினால் இறைவனை எப்போதும் மறக்காமல் இருப்பதும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.
Fixing the mind in one place through pratyahara, with great effort, and so gaining the ability to see apart the body's origin, which is made of karma, from the soul's knowledge; slowly forgetting the many separate forms in which God is seen and coming to sense the one God who is knowledge itself; love for God growing through that sensing; and, through that grown love, never forgetting God: these are the great benefits gained through pratyahara.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பிரத்தியாகாரத்தின் மூலம் மிகவும் கடினத்துடன் மனதை ஒரு நிலைப்படுத்தி,
Fixing the mind in one place through pratyahara, with great effort,
- வரி 2Line 2
கர்மாவினால் உண்டான உடலின் தொடக்கத்தையும் ஒளிமயமான ஆன்மாவின் அறிவையும் பிரித்துப் பார்க்கும் திறனை அடைந்து,
gaining the ability to see apart the body's origin, which is made of karma, from the radiant knowledge of the soul,
- வரி 3Line 3
தனித்தனியாகப் பார்க்கும் பல இறை உருவங்களை மெல்ல மறந்து, அறிவு வடிவாகிய ஒரே இறைவனை உள்நோக்கிக் கரைத்து உணர்வதும்,
slowly forgetting the many separate forms in which God is seen and, looking inward, dissolving into the sense of the one God who is knowledge itself,
- வரி 4Line 4
அந்த உணர்வால் வளர்ந்த அன்பினால் இறைவனை என்றும் மறவாமல் இருப்பதும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தின் பெருமையாகும்.
and, through the love that grows from that sensing, never forgetting God: these together are the greatness of pratyahara.
திருமந்திரம் பாடல் #585





