தொடர்ந்து படிக்கread this section continuously
கலந்த உயிருடன் காலம் அறியில்கலந்த உயிரது காலின் நெருக்கங்கலந்த உயிரது காலது கட்டிற்கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.
உரைmeaning
உயிருடன் கலந்த உடலினுள்ளே செல்லும் மூச்சுக்காற்றை அறிந்துகொண்டு, அந்த மூச்சுக்காற்றுடன் உயிருக்கும் உடலுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி, அந்த மூச்சுக்காற்றை வெளியே சென்றுவிடாமல் அடக்கி வைத்திருந்தால், அந்த மூச்சுக்காற்று உயிருடன் கலந்த உடலோடு எப்போதும் கலந்திருக்கும் என்கிறது பாடல்.
The verse says that if one comes to know the breath moving within the body that is joined with life, brings the breath into closeness with both life and body, and keeps that breath held back from going out, then that breath stays always mingled with the body that is joined with life.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிருடன் கலந்திருக்கும் உடலோடு, மூச்சுக்காற்றை அறிந்துகொண்டால்,
If, along with the body that is joined with life, one comes to know the breath,
- வரி 2Line 2
உயிருடன் கலந்திருக்கும் அந்த மூச்சுக்காற்றுக்கும் உடலுக்கும் நெருக்கம் ஏற்படும்;
a closeness comes about between that breath, joined with life, and the body;
- வரி 3Line 3
உயிருடன் கலந்திருக்கும் அந்த மூச்சுக்காற்றை அடக்கி வைத்திருந்தால்,
if that breath, joined with life, is held back and kept in,
- வரி 4Line 4
உயிருடன் கலந்திருக்கும் அந்த மூச்சுக்காற்றும் உடலுடன் நிலைத்து நிற்கும் என்கிறது பாடல்.
the verse says that breath, joined with life, then stands fixed together with the body.
திருமந்திரம் பாடல் #592





