தொடர்ந்து படிக்கread this section continuously
வாழலு மாம்பல காலும் மனத்திடைப்போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்பாழி பெரியதோர் பள்ளி அறையிலே.
உரைmeaning
உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிடாமல், மனதை ஒருமுகப்படுத்தி, சுழுமுனை வழியாக அந்த மூச்சுக்காற்றை மேலே ஏற்றித் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டால், ஒன்பது துவாரங்களைக் கொண்ட இந்த உடம்பில் பேரானந்த நிலையில் இருக்கலாமென்கிறது பாடல்.
The verse says that if the breath drawn in is not released, and, with the mind fixed in one point, that breath is raised through the sushumna and carried up to the sahasrāra at the crown of the head, then within this body of nine openings one may stand in a state of great bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மனத்திடையே பிளந்து செல்கின்ற வாயுவை,
The breath that keeps cleaving through the mind,
- வரி 2Line 2
வெளியே போகவிடாமல் உள்ளேயே பாய்ச்சிவிட்டால்,
if kept from going out and sent inward instead,
- வரி 3Line 3
ஏழு வழிகளும் இரண்டு பெருவாயில்களும் சேர்ந்த, ஒன்பது துவாரங்கள் கொண்ட,
in this body which joins seven passages and two great gateways into nine openings altogether,
- வரி 4Line 4
பெரிய இந்தப் பள்ளியறையில் பேரானந்த நிலையில் இருக்கலாமென்கிறது பாடல்.
the verse says one may stand, in that vast chamber, in a state of great bliss.
திருமந்திரம் பாடல் #594





