தொடர்ந்து படிக்கread this section continuously
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டிவீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்குவாணாள் அடைக்கும் வழியுமது வாமே.
உரைmeaning
பிரத்தியாகாரத்தின் மூலம் உள்ளே ஒரு நிலைப்படுத்திய மனதை, மீண்டும் முன்பு இருந்தபடி அலைபாய விடாமல் வைத்து, மனக்கண்ணை, முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை சென்று சேரும் இடமாகிய தலை உச்சிக்குச் சிறிது மேலே உள்ள வெற்று இடத்தில் வைத்து, கண்ணால் காணும் காட்சிகளும் காதால் கேட்கும் ஒலிகளும் மனதைப் பாதிக்காத வண்ணம் உணர்வில்லாமல் இருப்பது பற்றிச் சொல்கிறது பாடல்.
The verse speaks of keeping the mind, once fixed within through pratyahara, from wandering again as it did before; of placing the inner eye at the empty space a little above the crown, where the sushumna that runs along the spine arrives; and of remaining unmoved, so that neither the sights the eyes see nor the sounds the ears hear disturb the mind.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கோணாத மனத்தை ஒரு குறியில் நிறுத்திக் கீழே கட்டி வைத்து,
Fixing the steady, undeviating mind upon a single mark and binding it below,
- வரி 2Line 2
வெற்றிடமான முதுகுத் தண்டின் வழியே வெளியை நோக்கித் தானே பார்த்து,
and looking, by oneself, through the hollow channel of the spine toward the void beyond,
- வரி 3Line 3
கண்ணால் காணாதவர் போலவும், காதால் கேளாதவர் போலவும் இருப்பவர்களுக்கு,
for those who remain as though the eye does not see and the ear does not hear,
- வரி 4Line 4
அதுவும் ஒரு வழி என்கிறது பாடல்.
the verse says that this too is a way.
திருமந்திரம் பாடல் #588





