ஒடுங்கி நிலைபெற்ற வுத்தம ருள்ளம்நடுங்குவ தில்லை நமனுமங் கில்லையிடும்பையு மில்லை யிராப்பக லில்லைக்கடும்பசி யில்லைக் கற்றுவிட் டோர்க்கே.
எம்மா ருயிரு மிருநிலத் தோற்றமுஞ்செம்மா தவத்தின் செயலின் பெருமையுமம்மாய வனருள் பெற்றதவற் கல்லாதிம்மா தவத்தி னியல்பறி யாரே.
பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்சிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர்மறப்பில ராகிய மாதவத் தோர்கள்பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.
இருந்து வருந்தி யெழிற்றவஞ் செய்யும்பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றேயிருந்திந் திரனே யெவரே வரினுந்திருந்துந் தன்சிந்தை சிவனவன் பாலே.
கரந்துங் கரந்திலன் கண்ணகத் தொன்றான்பரந்த சடையன் பசும்பொன் னிறத்தனருந்தவர்க் கல்லா லணுகலு மாகான்விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.
பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினைமுன்னெய்த வைத்த முதலவ னெம்மிறைதன்னெய்து காலத்துத் தானே வெளிப்படுமன்னெய்த வைத்த மனமது தானே.
அமைச்சரு மானைக் குழாமு மரசும்பகைத்தெழு பூசலுட் பட்டன் னடுவேயமைத்ததோர் ஞானமு மாக்கமு நோக்கியிமைத்தழி யாதிருப் பாரவர் தாமே.
சாத்திர மோதுஞ் சதிர்களை விட்டுநீர்மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோலார்த்த பிறவி அகலவிட் டோடுமே
தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டிற்றவம்வேண்டா ஞான சமாதிகை கூடிற்றவம்வேண்டா மச்சக சன்மார்க்கத் தோர்க்குத்தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1624
1 / 9




