தொடர்ந்து படிக்கread this section continuously
எம்மா ருயிரு மிருநிலத் தோற்றமுஞ்செம்மா தவத்தின் செயலின் பெருமையுமம்மாய வனருள் பெற்றதவற் கல்லாதிம்மா தவத்தி னியல்பறி யாரே.
உரைmeaning
எமது உடல் உயிரோடு சேர்ந்திருக்கின்ற ஆன்மா, மற்றும் யாம் இருக்கின்ற உலகம் ஆகிய இரண்டு இடத்தின் மூலத்தையும், செம்மையாகிய மாபெரும் தவத்தைச் செய்கின்ற செயலின் பெருமையையும், அந்த மாயவனாக இருக்கின்ற இறைவனுடைய திருவருளைப் பெற்றுத் தவ நிலையில் இருப்பவர்களைத் தவிர, இந்த மாபெரும் தவத்தின் இயல்பையும் வேறு எவரும் அறிய மாட்டார்கள்.
The origin of both places, the soul that is joined with our body and life and the world in which we live, and the greatness of the act of performing the great and upright tapas, and the nature of this great tapas itself: none but those who have received the grace of that Lord who is the wondrous one, and who stand in the state of tapas, will know them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எமது உடல் உயிரோடு சேர்ந்திருக்கின்ற ஆன்மா, மற்றும் யாம் இருக்கின்ற உலகம் ஆகிய இரண்டு இடத்தின் மூலத்தையும்,
The origin of both places, the soul that is joined with our body and life and the world in which we live,
- வரி 2Line 2
செம்மையாகிய மாபெரும் தவத்தைச் செய்கின்ற செயலின் பெருமையையும்,
and the greatness of the act of performing the great and upright tapas,
- வரி 3Line 3
அந்த மாயவனாக இருக்கின்ற இறைவனுடைய திருவருளைப் பெற்றுத் தவ நிலையில் இருப்பவர்களைத் தவிர,
none but those who have received the grace of that Lord who is the wondrous one and who stand in the state of tapas,
- வரி 4Line 4
இந்த மாபெரும் தவத்தின் இயல்பையும் வேறு எவரும் அறிய மாட்டார்கள்.
and the nature of this great tapas itself, will any other person ever know.
திருமந்திரம் பாடல் #1625
1 / 2





