திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1624

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒடுங்கி நிலைபெற்ற வுத்தம ருள்ளம்நடுங்குவ தில்லை நமனுமங் கில்லையிடும்பையு மில்லை யிராப்பக லில்லைக்கடும்பசி யில்லைக் கற்றுவிட் டோர்க்கே.

உரை

ஆசைகளும், புலன்களும், ஒன்பது வாயில்களின் வழி நடக்கின்ற கர்மங்களும் ஒடுங்கி, இறைவனைப் பற்றிய நினைவிலேயே இருக்கின்ற நிலையைப் பெற்ற உத்தமர்களாகிய தவசிகளுடைய உள்ளம் எதற்காகவும் அச்சப்படுவது இல்லை. இறப்பு என்பது அவருக்கு இல்லை. துன்பம் என்பது அவருக்கு இல்லை. இரவு பகல் எனும் கால வேறுபாடுகள் அவருக்கு இல்லை. கடுமையான பசி தாகம் ஆகிய உணர்வுகள் அவருக்கு இல்லை. இவை எல்லாம், உலக அறிவைக் கற்று அதை விட்டுவிட்டு உண்மை அறிவைப் பற்றி இருக்கின்ற தவசிகளுடைய நிலையாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆசைகளும், புலன்களும், ஒன்பது வாயில்களின் வழி நடக்கின்ற கர்மங்களும் ஒடுங்கி, இறைவனைப் பற்றிய நினைவிலேயே இருக்கின்ற நிலையைப் பெற்ற உத்தமர்களாகிய தவசிகளுடைய உள்ளம்,

  • வரி 2

    எதற்காகவும் அச்சப்படுவது இல்லை; இறப்பு என்பதும் அவருக்கு இல்லை.

  • வரி 3

    துன்பம் என்பது அவருக்கு இல்லை; இரவு பகல் எனும் கால வேறுபாடுகளும் அவருக்கு இல்லை.

  • வரி 4

    கடுமையான பசி தாகம் ஆகிய உணர்வுகளும் அவருக்கு இல்லை; இவை எல்லாம் உலக அறிவைக் கற்று அதை விட்டுவிட்டு உண்மை அறிவைப் பற்றி இருக்கின்ற தவசிகளுடைய நிலையாகும்.

திருமந்திரம் பாடல் #1624

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout