தொடர்ந்து படிக்கread this section continuously
இருந்து வருந்தி யெழிற்றவஞ் செய்யும்பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றேயிருந்திந் திரனே யெவரே வரினுந்திருந்துந் தன்சிந்தை சிவனவன் பாலே.
உரைmeaning
தியானத்தில் வீற்றிருந்து, தமது உடலை வருத்திக்கொண்டு, அருமையான தவத்தைச் செய்கின்ற தவசிகள் பெருமை மிக்க தன்மையைக் கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களுடைய தவ நிலையைக் கலைக்க வேண்டும் என்று, அவர்கள் இருக்கின்ற இடத்திற்குத் தேவர்களின் தலைவனாகிய இந்திரனே வந்தாலும், அல்லது அவரை விட வலிமை பெற்ற யார் வந்து முயற்சி செய்தாலும், எதனாலும் மாறாத, பண்பட்ட, மேன்மையான அவர்களுடைய சிந்தை சிவப் பரம்பொருளாகிய இறைவனுடைய மேல் மட்டுமே இருக்கும்.
The tapasvins who sit in meditation, wear down their own bodies and perform the rare tapas are people of a greatly noble nature. Even if Indra, the chief of the gods, himself comes to the place where they are in order to break their state of tapas, or if anyone stronger than he comes and makes the attempt, their refined and lofty mind, which nothing can change, will rest upon the supreme reality Siva alone.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தியானத்தில் வீற்றிருந்து, தமது உடலை வருத்திக்கொண்டு, அருமையான தவத்தைச் செய்கின்ற தவசிகள்,
The tapasvins who sit in meditation, wear down their own bodies and perform the rare tapas,
- வரி 2Line 2
பெருமை மிக்க தன்மையைக் கொண்டவர்கள் ஆவார்கள்; அவர்களுடைய தவ நிலையைக் கலைக்க வேண்டும் என்று சிலர் முயலலாம்.
are people of a greatly noble nature; and some may try to break their state of tapas.
- வரி 3Line 3
அவர்கள் இருக்கின்ற இடத்திற்குத் தேவர்களின் தலைவனாகிய இந்திரனே வந்தாலும், அல்லது அவரை விட வலிமை பெற்ற யார் வந்து முயற்சி செய்தாலும்,
Even if Indra, the chief of the gods, himself comes to the place where they are, or if anyone stronger than he comes and makes the attempt,
- வரி 4Line 4
எதனாலும் மாறாத, பண்பட்ட, மேன்மையான அவர்களுடைய சிந்தை சிவப் பரம்பொருளாகிய இறைவனுடைய மேல் மட்டுமே இருக்கும்.
their refined and lofty mind, which nothing can change, will rest upon the supreme reality Siva alone.
திருமந்திரம் பாடல் #1627
1 / 2





