திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1629

தொடர்ந்து படிக்கread this section continuously

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினைமுன்னெய்த வைத்த முதலவ னெம்மிறைதன்னெய்து காலத்துத் தானே வெளிப்படுமன்னெய்த வைத்த மனமது தானே.

உரை

தவ நிலையை அடைந்த பின், அதில் மேன்மையான நிலையை அடையச் செய்வது பேரின்பம் நிறைந்த ஒரு பிறவியாகும். இந்தப் பிறவியை எடுப்பதற்கு முன்பே, ஒவ்வொரு பிறவியிலும் அந்த நிலையை அடைவதற்கான வழிமுறைகளை வைத்து அருளியவன், ஆதி முதல்வனாகிய எமது இறைவனே ஆவான். தாம் இறைவனாகவே இருக்கின்றோம் என்பதை எமது ஆன்மா உணருகின்ற காலத்தில், அவன் தானாகவே உள்ளிருந்து வெளிப்பட்டு அருள்வான். இறைவன் அவ்வாறு வெளிப்படுகின்ற நிலையை அடையச் செய்வது, தவ நிலையில் உறுதியாக நிற்கின்ற மனமே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    தவ நிலையை அடைந்த பின், அதில் மேன்மையான நிலையை அடையச் செய்வது பேரின்பம் நிறைந்த ஒரு பிறவியாகும்.

  • வரி 2

    இந்தப் பிறவிக்கு முன்பே, ஒவ்வொரு பிறவியிலும் அந்த நிலையை அடைவதற்கான வழிமுறைகளை வைத்து அருளியவன், ஆதி முதல்வனாகிய எமது இறைவனே ஆவான்.

  • வரி 3

    தாம் இறைவனாகவே இருக்கின்றோம் என்பதை எமது ஆன்மா உணருகின்ற காலத்தில், அவன் தானாகவே உள்ளிருந்து வெளிப்பட்டு அருள்வான்.

  • வரி 4

    இறைவன் அவ்வாறு வெளிப்படுகின்ற நிலையை அடையச் செய்வது, தவ நிலையில் உறுதியாக நிற்கின்ற மனமே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1629

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout