திருமூலர் அருளிய திருமந்திரம்
8. அடிமுடி தேடல்

இரண்டாம் தந்திரம் பாடல் 372–380 (9 பாடல்கள்)

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்பிரமன்மால் தங்கள்தம் பேதமை யாலேபரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்கஅரனடி தேடி அரற்றுகின் றாரே.

ஆமே ழுலகுற நின்றஎம் அண்ணலும்தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்வானே ழுலகுறு மாமணி கண்டனைநானே அறிந்தேன் அவனாண்மையி னாலே.

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னம்சேணாய்வா னோங்கி திருவுரு வாய்அண்டத்தாணுவும் ஞாயிறும் தண்மதி யுங்கடந்தாண்முழுது அண்டமு மாகிநின் றானே.

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்ததுசென்றார் இருவர் திருமுடி மேற்செலநன்றுஆங் கழலடி நாடஒண் ணாதே.

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்மூவடி தாவென் றவனும் முனிவரும்பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்தாவடி யிட்டுத் தலைப்புஎய்து மாறே.

தானக் கமலத் திருந்த சதுமுகன்தானக் கருங்கட லூழித் தலைவனும்ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்றதானப் பெரும்பொருள் தன்மையது ஆமே.

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்டுஆலிங் கனஞ்செய் துலகம் வலம்வரும்கோலிங்கு அமைஞ்சருள் கூடலு மாமே.

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்ஆள்கொடுத் தின்பமுங் கொடுத்துக் கோளாகத்தாள்கொடுத் தானதடி சாரகி லாரே.

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்குவாழி சதுமுகன் வந்து வெளிப்படும்வீழித் தலைநீர் விதித்தது தாவெனஊழிக் கதிரவன் ஒளியைவென் றானே.

திருமந்திரம் பாடல் #372

1 / 9

0:000:00
8. அடிமுடி தேடல்பாடல் 372

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout