திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 378

இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்டுஆலிங் கனஞ்செய் துலகம் வலம்வரும்கோலிங்கு அமைஞ்சருள் கூடலு மாமே.

உரை

அண்டங்கள் அனைத்திலும் இரண்டறக் கலந்து எழுந்து நின்ற மாபெரும் தீப்பிழம்பான பரம்பொருள், உயிர்கள் தன்னை நாடி வந்து சேரும் பொருட்டுப் பேரருள் கொண்டு உண்மையான வழிமுறைகளைக் கொடுத்து, உலகத்துப் பொருள்கள் அனைத்திலும் கலந்து உலா வருகிறது. இறைவனை அடையவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் அந்த உண்மையான வழிமுறைகளைப் பின்பற்றினால், எல்லாவற்றிலும் கலந்திருக்கும், அடிமுடி காணமுடியாத பரம்பொருளாகிய இறைவனை உணரலாம். அடிமுடி காணமுடியாத அளவு மிகப்பெரும் மகோன்னதம் மிக்கவனாய், இறைவன் காட்டிய அந்த நெறிவழிகளைப் பின்பற்றிச் சென்றால், எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காணமுடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    அண்டங்கள் அனைத்திலும் இரண்டறக் கலந்து எழுந்து நின்ற மாபெரும் தீப்பிழம்பான பரம்பொருள்,

  • வரி 2

    உயிர்கள் தன்னை நாடி வந்து சேரும் பொருட்டுப் பேரருள் கொண்டு உண்மையான வழிமுறைகளைக் கொடுத்து, உலகத்துப் பொருள்கள் அனைத்திலும் கலந்து உலா வருகிறது.

  • வரி 3

    இறைவனை அடையவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் அந்த உண்மையான வழிமுறைகளைப் பின்பற்றினால், எல்லாவற்றிலும் கலந்திருக்கும், அடிமுடி காணமுடியாத பரம்பொருளாகிய இறைவனை உணரலாம்.

  • வரி 4

    அடிமுடி காணமுடியாத அளவு மிகப்பெரும் மகோன்னதம் மிக்கவனாய், இறைவன் காட்டிய அந்த நெறிவழிகளைப் பின்பற்றிச் சென்றால், எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காணமுடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.

திருமந்திரம் பாடல் #378

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout