தொடர்ந்து படிக்கread this section continuously
தானக் கமலத் திருந்த சதுமுகன்தானக் கருங்கட லூழித் தலைவனும்ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்றதானப் பெரும்பொருள் தன்மையது ஆமே.
உரைmeaning
நான்கு முகங்களோடு தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருக்கும் பிரமனும், கருமையான நிறத்தோடு பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டு படுத்திருக்கும் திருமாலும், ஊழிக்காலத்தில் அழிவின் தலைவனாக இருக்கும் உருத்திரனும், உயிர்களினுடைய உடலாகவும் உயிராகவும் உயிரின் உணர்வாகவும் உயிர்களுடன் கலந்திருக்கும் மாபெரும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் தன்மையை ஒத்தவர்களாக ஆகமுடியாது.
Brahma, who sits with four faces on the lotus flower as his abode, and Thirumal, dark in hue, who reclines on the ocean of milk as his abode, and Rudra, who is the lord of destruction at the time of the cataclysm, none of them can equal the nature of Sadashivamurthi, the great supreme being who dwells mingled with all beings as their body, their life, and the awareness of that life.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நான்கு முகங்களோடு தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருக்கும் பிரமனும்,
Brahma, who sits with four faces on the lotus flower as his abode,
- வரி 2Line 2
கருமையான நிறத்தோடு பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டு படுத்திருக்கும் திருமாலும்,
and Thirumal, dark in hue, who reclines on the ocean of milk as his abode,
- வரி 3Line 3
ஊழிக்காலத்தில் அழிவின் தலைவனாக இருக்கும் உருத்திரனும்,
and Rudra, who is the lord of destruction at the time of the cataclysm,
- வரி 4Line 4
உயிர்களினுடைய உடலாகவும் உயிராகவும் உயிரின் உணர்வாகவும் உயிர்களுடன் கலந்திருக்கும் மாபெரும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் தன்மையை ஒத்தவர்களாக ஆகமுடியாது.
none of them can equal the nature of Sadashivamurthi, the great supreme being who dwells mingled with all beings as their body, their life, and the awareness of that life.
திருமந்திரம் பாடல் #377





