திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 376

இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்மூவடி தாவென் றவனும் முனிவரும்பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்தாவடி யிட்டுத் தலைப்புஎய்து மாறே.

உரை

இறைவனின் சிவந்த திருவடிகளைப் போற்றி வணங்கும் பலகோடி தேவர்களும், மாபலியிடம் மூன்றடி நிலம் தா என்று கேட்டு வென்ற திருமாலும், இறைவனிடம் அருள் வேண்டித் தவமிருக்கும் முனிவர்களும், இறைவன் வகுத்துக்கொடுத்த வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கும் பிரமனும், எவ்வளவு தூரம் அலைந்து தேடினாலும் இறைவனின் திருவடிகளையோ திருமுடியையோ காணமுடியாது. தேவர்களும், முனிவர்களும், திருமாலும், பிரமனும் எவ்வளவு உயர்ந்த இறைநிலையில் இருந்தாலும், நானே செய்கிறேன் என்ற எண்ணத்துடன் இறைவனைத் தமக்குள் உணராமல் வெளியில் தேடினால், இறைவனைக் காணமுடியாது.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனின் சிவந்த திருவடிகளைப் போற்றி வணங்கும் பலகோடி தேவர்களும், மாபலியிடம் மூன்றடி நிலம் தா என்று கேட்டு வென்ற திருமாலும்,

  • வரி 2

    இறைவனிடம் அருள் வேண்டித் தவமிருக்கும் முனிவர்களும், இறைவன் வகுத்துக்கொடுத்த வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கும் பிரமனும்,

  • வரி 3

    எவ்வளவு தூரம் அலைந்து தேடினாலும் இறைவனின் திருவடிகளையோ திருமுடியையோ காணமுடியாது.

  • வரி 4

    தேவர்களும், முனிவர்களும், திருமாலும், பிரமனும் எவ்வளவு உயர்ந்த இறைநிலையில் இருந்தாலும், நானே செய்கிறேன் என்ற எண்ணத்துடன் இறைவனைத் தமக்குள் உணராமல் வெளியில் தேடினால், இறைவனைக் காணமுடியாது.

திருமந்திரம் பாடல் #376

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout