தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்ததுசென்றார் இருவர் திருமுடி மேற்செலநன்றுஆங் கழலடி நாடஒண் ணாதே.
உரைmeaning
மண்ணுலகிலிருந்து அண்டங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு, விண்ணுலகமும் தாண்டி நீண்டு வளர்ந்த தீப்பிழம்பாக நின்றான் சதாசிவமூர்த்தி. அவனது அந்த அக்னி உருவத்தை ஆராயத் தொடங்கி, பிரமன் இறைவனின் திருமுடியைக் காணவும், திருமால் இறைவனின் திருவடியைக் காணவும் சென்றனர். பிரமன் மேலே மேலே சென்றுகொண்டே இருக்க இறைவனின் திருமுடி மேலே வளர்ந்துகொண்டே இருந்தது; திருமால் கீழே கீழே சென்றுகொண்டே இருக்க, நன்மையருளும் இறைவனின் கழல்கள் அணிந்த திருவடியும் கீழே வளர்ந்துகொண்டே இருந்தது. இருவருக்கும் எதையும் காண இயலவில்லை. இறைவனை உணர்ந்தால் அவன் எந்த உருவத்தில் இருந்தாலும் அறியலாம்; அவனை ஆராய்ச்சி செய்து தெரிந்துகொள்ள முயன்றால் அவனை அறிய இயலாது.
Sadashivamurthi stood as a pillar of flame that drew all the worlds into itself from the earth below and grew tall, stretching beyond the heavens above. Setting out to search that form of fire, Brahma went to find God's crown and Thirumal went to find God's feet. As Brahma went up and up, God's crown kept growing higher still; as Thirumal went down and down, God's feet, adorned with anklets and granting all good, kept growing lower still. Neither of them could find anything. If one comes to know God, one can recognize him in whatever form he takes; but one who tries to know him by searching and investigating cannot come to know him.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மண்ணுலகிலிருந்து அண்டங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு, விண்ணுலகமும் தாண்டி நீண்டு வளர்ந்த தீப்பிழம்பாக நின்றான் சதாசிவமூர்த்தி.
Sadashivamurthi stood as a pillar of flame that drew all the worlds into itself from the earth below and grew tall, stretching beyond the heavens above.
- வரி 2Line 2
அவனது அந்த அக்னி உருவத்தை ஆராயத் தொடங்கி, பிரமன் இறைவனின் திருமுடியைக் காணவும், திருமால் இறைவனின் திருவடியைக் காணவும் சென்றனர்.
Setting out to search that form of fire, Brahma went to find God's crown and Thirumal went to find God's feet.
- வரி 3Line 3
பிரமன் மேலே மேலே சென்றுகொண்டே இருக்க இறைவனின் திருமுடி மேலே வளர்ந்துகொண்டே இருந்தது; திருமால் கீழே கீழே சென்றுகொண்டே இருக்க, நன்மையருளும் இறைவனின் கழல்கள் அணிந்த திருவடியும் கீழே வளர்ந்துகொண்டே இருந்தது.
As Brahma went up and up, God's crown kept growing higher still; as Thirumal went down and down, God's feet, adorned with anklets and granting all good, kept growing lower still.
- வரி 4Line 4
இருவருக்கும் எதையும் காண இயலவில்லை. இறைவனை உணர்ந்தால் அவன் எந்த உருவத்தில் இருந்தாலும் அறியலாம்; அவனை ஆராய்ச்சி செய்து தெரிந்துகொள்ள முயன்றால் அவனை அறிய இயலாது.
Neither of them could find anything. If one comes to know God, one can recognize him in whatever form he takes; but one who tries to know him by searching and investigating cannot come to know him.
திருமந்திரம் பாடல் #375





