திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 374

இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னம்சேணாய்வா னோங்கி திருவுரு வாய்அண்டத்தாணுவும் ஞாயிறும் தண்மதி யுங்கடந்தாண்முழுது அண்டமு மாகிநின் றானே.

உரை

சதாசிவமூர்த்தியாகிய இறைவன் ஒருவனே, அனைத்து உயிர்களினுடைய உடம்பாகவும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளிருக்கும் நெருப்பாகவும் இருக்கின்றான். மண்ணுக்கும் விண்ணுக்கும் ஓங்கி நின்ற தீப்பிழம்பு உருவமாகவும், அண்டங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் தூணாகவும், சூரியனாகவும், குளிர்ந்த சந்திரனாகவும் இருந்து, பரவியிருக்கின்ற அண்டங்கள் மொத்தமும் தானாகவே ஆகி நிற்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    சதாசிவமூர்த்தியாகிய இறைவன் ஒருவனே, அனைத்து உயிர்களினுடைய உடம்பாகவும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளிருக்கும் நெருப்பாகவும் இருக்கின்றான்.

  • வரி 2

    மண்ணுக்கும் விண்ணுக்கும் ஓங்கி நின்ற தீப்பிழம்பு உருவமாகவும் இருக்கின்றான்.

  • வரி 3

    அண்டங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் தூணாகவும், சூரியனாகவும், குளிர்ந்த சந்திரனாகவும் இருக்கின்றான்.

  • வரி 4

    பரவியிருக்கின்ற அண்டங்கள் மொத்தமும் தானாகவே ஆகி நிற்கின்றான்.

திருமந்திரம் பாடல் #374

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout