திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 373

இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமே ழுலகுற நின்றஎம் அண்ணலும்தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்வானே ழுலகுறு மாமணி கண்டனைநானே அறிந்தேன் அவனாண்மையி னாலே.

உரை

பிரமனும் திருமாலும் அடியையோ உச்சியையோ காணமுடியாத அளவிற்கு, ஈரேழு பதினான்கு உலகங்களையும் கடந்து நிற்கின்றான் எம்பெருமான் சதாசிவமூர்த்தி. அவன் தானாகவே ஏழுலகிற்கும் தீப்பிழம்பாக நிற்கின்றான். ஏழுலகமும் வியாபித்திருக்கும் வானத்திலும் மாபெரும் ஒளிப்பிழம்பாக ஊடுருவி நிற்பவன், நீலநிறமடைந்த கழுத்தை உடைய சிவபெருமான். இறைவன் என்னை ஆட்கொண்ட இறைத்தன்மையாலேயே நானும் இதை அறிந்தேன்.

வரி வாரியாக

  • வரி 1

    பிரமனும் திருமாலும் அடியையோ உச்சியையோ காணமுடியாத அளவிற்கு, ஈரேழு பதினான்கு உலகங்களையும் கடந்து நிற்கின்றான் எம்பெருமான் சதாசிவமூர்த்தி.

  • வரி 2

    அவன் தானாகவே ஏழுலகிற்கும் தீப்பிழம்பாக நிற்கின்றான்.

  • வரி 3

    ஏழுலகமும் வியாபித்திருக்கும் வானத்திலும் மாபெரும் ஒளிப்பிழம்பாக ஊடுருவி நிற்பவன், நீலநிறமடைந்த கழுத்தை உடைய சிவபெருமான்.

  • வரி 4

    இறைவன் என்னை ஆட்கொண்ட இறைத்தன்மையாலேயே நானும் இதை அறிந்தேன்.

திருமந்திரம் பாடல் #373

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout