திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 380

இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்குவாழி சதுமுகன் வந்து வெளிப்படும்வீழித் தலைநீர் விதித்தது தாவெனஊழிக் கதிரவன் ஒளியைவென் றானே.

உரை

ஊழிக்காலம் முடிந்ததும், இறைவனைச் சரணடைந்து ஒளி உடலோடு வாழும் அடியவர்களில் ஒருவரை, நான்கு முகங்கள் கொண்டு படைத்தல் தொழில் புரியும் பிரமனின் தொழிலைச் செய்ய இறைவன் தேர்ந்தெடுக்கின்றான். புதிதாகப் பிரமனின் தொழில் பெற்ற அந்த அடியவரும் இறைவனை நாடிவந்து, என்ன வேலை செய்யவேண்டும் என்று தந்தருளுங்கள் என வேண்டிக்கொள்ள, ஊழிக்காலத்தில் அனைத்தையும் சுட்டெரிக்கும் சூரியனையும் மிஞ்சி நிற்கும் மாபெரும் ஒளியாகிய இறைவனும், அவருக்குப் படைக்கும் தொழிலைக் கொடுத்தருளினான். பிரமனும் திருமாலும் உலகத் தொழில்கள் செய்யும் தேவர்களும் அனைவருமே, பல காலமாக இறைவனின் அடியவர்களாக இருந்து தவம் புரிந்தவர்கள்தான். தற்போது இருக்கும் பிரமன், திருமால், உலகத் தொழில்கள் செய்யும் தேவர்கள் ஆகியோரின் பதவிக் காலம் முடிந்ததும், அடுத்த அடியவர்களுக்கு அத்தொழிலைச் செய்யும் தகுதி இறைவனது திருவருளால் கிடைத்தபின், அவர்களுக்கு ஏற்ற தொழிலை இறைவன் கொடுத்தருளுகின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    ஊழிக்காலம் முடிந்ததும், இறைவனைச் சரணடைந்து ஒளி உடலோடு வாழும் அடியவர்களில் ஒருவரை, நான்கு முகங்கள் கொண்டு படைத்தல் தொழில் புரியும் பிரமனின் தொழிலைச் செய்ய இறைவன் தேர்ந்தெடுக்கின்றான்.

  • வரி 2

    புதிதாகப் பிரமனின் தொழில் பெற்ற அந்த அடியவரும் இறைவனை நாடிவந்து, என்ன வேலை செய்யவேண்டும் என்று தந்தருளுங்கள் என வேண்டிக்கொள்ள, ஊழிக்காலத்தில் அனைத்தையும் சுட்டெரிக்கும் சூரியனையும் மிஞ்சி நிற்கும் மாபெரும் ஒளியாகிய இறைவனும், அவருக்குப் படைக்கும் தொழிலைக் கொடுத்தருளினான்.

  • வரி 3

    பிரமனும் திருமாலும் உலகத் தொழில்கள் செய்யும் தேவர்களும் அனைவருமே, பல காலமாக இறைவனின் அடியவர்களாக இருந்து தவம் புரிந்தவர்கள்தான்.

  • வரி 4

    தற்போது இருக்கும் பிரமன், திருமால், உலகத் தொழில்கள் செய்யும் தேவர்கள் ஆகியோரின் பதவிக் காலம் முடிந்ததும், அடுத்த அடியவர்களுக்கு அத்தொழிலைச் செய்யும் தகுதி இறைவனது திருவருளால் கிடைத்தபின், அவர்களுக்கு ஏற்ற தொழிலை இறைவன் கொடுத்தருளுகின்றான்.

திருமந்திரம் பாடல் #380

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout