தொடர்ந்து படிக்கread this section continuously
ஆதியோ டந்தம் இலாத பராபரம்போதம தாகப் புணரும் பராபரைசோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.
உரைmeaning
முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள், அசையாத சக்தியாகிய பராபரமாக இருக்கிறார். அறிவு வடிவாக இருக்கும் அந்தப் பராபரத்தில், உலகைப் படைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும், அசையும் சக்தியாகிய பராபரை உருவாகிறது. அசையும் சக்தி உருவானதும் அதிலிருந்து சோதி உருவாகிறது. அந்தச் சோதியிலிருந்து ஒலி உருவாகிறது.
The supreme being, who has no beginning and no end, exists as Parabaram, the unmoving power. When, in that Parabaram, which is of the form of pure awareness, the thought of creating the world arises, Paraparai, the moving power, comes into being. Once that moving power comes into being, light arises from it. And from that light, sound arises.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள், அசையாத சக்தியாகிய பராபரமாக இருக்கிறார்.
The supreme being, who has no beginning and no end, exists as Parabaram, the unmoving power.
- வரி 2Line 2
அறிவு வடிவாக இருக்கும் அந்தப் பராபரத்தில், உலகைப் படைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும், அசையும் சக்தியாகிய பராபரை உருவாகிறது.
When, in that Parabaram, which is of the form of pure awareness, the thought of creating the world arises, Paraparai, the moving power, comes into being.
- வரி 3Line 3
அசையும் சக்தி உருவானதும் அதிலிருந்து சோதி உருவாகிறது.
Once that moving power comes into being, light arises from it.
- வரி 4Line 4
அந்தச் சோதியிலிருந்து ஒலி உருவாகிறது.
And from that light, sound arises.
திருமந்திரம் பாடல் #381





