திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 382

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்றேபேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

உரை

பாடல் #381இல் உள்ளபடி, பராபரையாகிய எண்ணத்தில் சுத்தமான ஒலியும் ஒளியும் இருக்கின்றன. அந்தச் சுத்தமான ஒலி ஒளிக்குச் சிவசக்தி என்று பெயர். அந்தப் பராபரையாகிய எண்ணம் ஒலியென்றும் ஒளியென்றும் பிரிந்திருப்பதற்குக் காரணம், அசையாத அறிவுசக்தியிலிருந்து உலகை உருவாக்கும் செயல்சக்தி பிறப்பதற்காகவே. அசையாத அறிவுசக்தியில் அசைகின்ற எண்ணசக்தி கலக்க, ஒலியும் ஒளியும் தோன்றுகின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #381இல் உள்ளபடி, பராபரையாகிய எண்ணத்தில் சுத்தமான ஒலியும் ஒளியும் இருக்கின்றன.

  • வரி 2

    அந்தச் சுத்தமான ஒலி ஒளிக்குச் சிவசக்தி என்று பெயர்.

  • வரி 3

    அந்தப் பராபரையாகிய எண்ணம் ஒலியென்றும் ஒளியென்றும் பிரிந்திருப்பதற்குக் காரணம், அசையாத அறிவுசக்தியிலிருந்து உலகை உருவாக்கும் செயல்சக்தி பிறப்பதற்காகவே.

  • வரி 4

    அசையாத அறிவுசக்தியில் அசைகின்ற எண்ணசக்தி கலக்க, ஒலியும் ஒளியும் தோன்றுகின்றன.

திருமந்திரம் பாடல் #382

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout