திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 383

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்கல்லொளி போலக் கலந்துள் இருந்திடும்வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

உரை

ஒலியாய் இருக்கும் சிவத்தோடு, எப்போதும் பிரியாமல் ஒளியாய் இருக்கும் சக்தி சேர்ந்தே இருக்கிறது. நவரத்தினத்தில் உள்ள வைரமும் அந்த வைரத்திலிருந்து வரும் ஒளியும் வேறு வேறாக அறியப்பட்டாலும் இரண்டும் ஒன்றே ஆகும். அதுபோலவே சிவமும் சக்தியும் ஒன்றே ஆகும். இப்படி இருக்கின்ற சிவசக்தியை உருவாக்கிய பரம்பொருளின் வலிமைகளை விளக்கிச் சொல்லிடில், அது பலகாத தூரத்திற்கும் நீண்டு போய்க்கொண்டேயிருக்குமே தவிர முடியாது.

வரி வாரியாக

  • வரி 1

    ஒலியாய் இருக்கும் சிவத்தோடு, எப்போதும் பிரியாமல் ஒளியாய் இருக்கும் சக்தி சேர்ந்தே இருக்கிறது.

  • வரி 2

    நவரத்தினத்தில் உள்ள வைரமும் அந்த வைரத்திலிருந்து வரும் ஒளியும் வேறு வேறாக அறியப்பட்டாலும் இரண்டும் ஒன்றே ஆகும்.

  • வரி 3

    அதுபோலவே சிவமும் சக்தியும் ஒன்றே ஆகும்.

  • வரி 4

    இப்படி இருக்கின்ற சிவசக்தியை உருவாக்கிய பரம்பொருளின் வலிமைகளை விளக்கிச் சொல்லிடில், அது பலகாத தூரத்திற்கும் நீண்டு போய்க்கொண்டேயிருக்குமே தவிர முடியாது.

திருமந்திரம் பாடல் #383

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout