தொடர்ந்து படிக்கread this section continuously
தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்சார்வத்துச் சத்திஒரு சாத்துமா னாமே.
உரைmeaning
சொற்களால் விவரிக்க இயலாத மாபெரும் வல்லமை பொருந்திய ஜோதி வடிவான இறைவன், அண்டம் முதலாக அனைத்தையும் உருவாக்க எண்ணி, தன்னுடைய ஒரு கூறு சக்தியை, சேர்ந்தே இருக்கும் ஒலிக்கும் ஒளிக்கும் கொடுத்து, பஞ்சபூதங்கள் முதல் உலகம் வரை அனைத்தையும் உருவாக்குகின்றான்.
God, who is of the form of light and possesses immeasurable power beyond the reach of words, intends to bring into being everything, the worlds and all else, and gives a portion of his own power to sound and light, which remain ever together, and so brings into being everything from the five elements to the world itself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சொற்களால் விவரிக்க இயலாத மாபெரும் வல்லமை பொருந்திய ஜோதி வடிவான இறைவன்,
God, who is of the form of light and possesses immeasurable power beyond the reach of words,
- வரி 2Line 2
அண்டம் முதலாக அனைத்தையும் உருவாக்க எண்ணி,
intends to bring into being everything, the worlds and all else,
- வரி 3Line 3
தன்னுடைய ஒரு கூறு சக்தியை, சேர்ந்தே இருக்கும் ஒலிக்கும் ஒளிக்கும் கொடுத்து,
and gives a portion of his own power to sound and light, which remain ever together,
- வரி 4Line 4
பஞ்சபூதங்கள் முதல் உலகம் வரை அனைத்தையும் உருவாக்குகின்றான்.
and so brings into being everything from the five elements to the world itself.
திருமந்திரம் பாடல் #384





