தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியைவெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்சிதைந்தனர் அண்ணல் சினஞ்செய்த போதே.
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்எந்தை யிவனல்ல யாமே உலகினிற்பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்யஅந்தமி லாதானும் அருள்புரிந் தானே.
அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்அப்பரி சேஅங்கி அதிசய மாகில்அப்பரி சேஅது நீர்மை யுள்கலந்துஅப்பரி சேசிவனாய் ஆவிக்கின் றானே.
அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்அப்பரி சேஅவ ராகிய காரணம்அப்பரி சேஅங்கி யுள்நாளும் உள்ளிட்டுஅப்பரி சேஆகி அலர்ந்திருந் தானே.
அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்சிவந்த பரமிது சென்று கதுவஉவந்த பெருவழி யோடிவந் தானே.
அரிபிர மன்தக்கன் அருக்க னுடன்வருமதி வாலை வன்னிநல் இந்திரன்சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்குவிமந் திரம்கொல் கொடியது வாமே.
நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்பல்லார் அமரர் பரிந்தருள் செய்கெனவில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதேஅளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானைவிளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #353
1 / 9




