திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 358

இரண்டாம் தந்திரம்4. தக்கன் வேள்வி

தொடர்ந்து படிக்கread this section continuously

அரிபிர மன்தக்கன் அருக்க னுடன்வருமதி வாலை வன்னிநல் இந்திரன்சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

உரை

திருமால், பிரம்மன், தக்கன், சூரியன், அவனுடன் வரும் சந்திரன், சரஸ்வதி, அக்கினி, தேவர் தலைவனான இந்திரன் ஆகிய தேவர்களின் தலை, முகம், மூக்கு, சிறப்பான கைகள், அவற்றைத் தாங்கும் தோள்கள் ஆகியவை, இறைவனின் அருள் இன்றி அறியாமையில் தக்கன் செய்த யாகத்தில் கலந்துகொண்டதால், இறைவனின் சினத்தால் அழிந்தன. பிறகு தம் பிழையை உணர்ந்து இறைவனை வேண்ட, அவற்றை மீண்டும் நலமுடன் பெற்றார்கள்.

பாடல் #357ல் உள்ள உட்கருத்தின்படி, அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தம்மைத் திருத்திக்கொண்டு இறைவன் அருள் பெற்ற உயிர்கள், இறைவனை அடையும் வழிகளான பக்தி, யோகம், கர்மம் ஆகிய மார்க்கங்களை மீண்டும் இறையருளால் மேற்கொண்டு இறைவனை அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    திருமால், பிரம்மன், தக்கன், சூரியன், சந்திரன், சரஸ்வதி, அக்கினி, இந்திரன் ஆகிய தேவர்களின் தலை, முகம், மூக்கு,

  • வரி 2

    சிறப்பான கைகளும் அவற்றைத் தாங்கும் தோள்களும்,

  • வரி 3

    இறைவனின் அருள் இன்றி அறியாமையில் தக்கன் யாகத்தில் கலந்துகொண்டதால் இறைவனின் சினத்தால் அழிந்தன.

  • வரி 4

    தம் பிழையை உணர்ந்து இறைவனை வேண்ட, அவற்றை மீண்டும் நலமுடன் பெற்றார்கள்; அறிந்து திருந்திய உயிர்கள் இறையருளால் பக்தி, யோகம், கர்மம் ஆகிய வழிகளால் இறைவனை அடையலாம்.

திருமந்திரம் பாடல் #358

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout