திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 360

இரண்டாம் தந்திரம்4. தக்கன் வேள்வி

தொடர்ந்து படிக்கread this section continuously

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்பல்லார் அமரர் பரிந்தருள் செய்கெனவில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

உரை

இறைவனின் அருள் வேண்டி வேள்விகள் அமைத்துத் தம்மை வணங்கும் நல்லவர்கள் அனைவரும் அனைத்துவித நலன்களும் பெற்று வாழ, தயைகூர்ந்து அருள்புரியுமாறு பலகோடி தேவர்கள் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்ள, யாராலும் அழிக்க முடியாத அசுரர்களையும் அவர்களின் முப்புரங்களையும் வில்லேந்தி அம்புகொண்டு எரித்த எம்பெருமான், கருணைகொண்டு, உயிர்களை வாட்டும் பல கொடிய அசுரர்களையும் அழிக்கும் வலிமையை அவர்களுக்கு வழங்கி அருளினான்.

உயிர்கள் எந்தச் செயலைச் செய்தாலும், மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக வைத்து இறைவனை மட்டுமே நினைத்து, அவனது திருவருளைக் கொடுக்குமாறு வேண்டிக்கொண்டு, இறையருள் பெற்றுச் செய்தால், அச்செயலுக்குத் தடையாக இருப்பவற்றை அழிக்கும் சக்தியை இறைவன் அந்த உயிர்களுக்கு அருளுவான்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனின் அருள் வேண்டி வேள்விகள் அமைத்துத் தம்மை வணங்கும் நல்லவர்கள் அனைத்துவித நலன்களும் பெற்று வாழ,

  • வரி 2

    பலகோடி தேவர்கள் அனைவரும் தயைகூர்ந்து அருள்புரியுமாறு இறைவனை வேண்டிக்கொண்டனர்.

  • வரி 3

    யாராலும் அழிக்க முடியாத அசுரர்களையும் அவர்களின் முப்புரங்களையும் வில்லேந்தி அம்புகொண்டு எரித்த எம்பெருமான்,

  • வரி 4

    கருணைகொண்டு, உயிர்களை வாட்டும் பல கொடிய அசுரர்களையும் அழிக்கும் வலிமையை அவர்களுக்கு வழங்கி அருளினான்.

திருமந்திரம் பாடல் #360

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout