திருமூலர் அருளிய திருமந்திரம்
5. பிரளயம்

இரண்டாம் தந்திரம் பாடல் 362–366 (5 பாடல்கள்)

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்திருவருங் கோவென் றிகல இறைவன்ஒருவனும் நீருற ஓங்கொளி யாகிஅருவரை யாய்நின் றருள் புரிந் தானே.

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டுலகார் அழலைக்கண் டுள்வீழா தோடிஅலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்கண்கடல் செய்யுங் கருத்துஅறி யாரே.

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்திஅமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரேதிகைத்ததெண் ணீரிற் கடலொலி யோசைமிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்கண்பழி யாத கமலத் திருக்கின்றநண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்விண்பழி யாத விருத்திகொண் டானே.

திருமந்திரம் பாடல் #362

1 / 5

0:000:00
5. பிரளயம்பாடல் 362

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout