தொடர்ந்து படிக்கread this section continuously
பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்கண்பழி யாத கமலத் திருக்கின்றநண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்விண்பழி யாத விருத்திகொண் டானே.
உரைmeaning
இறைவனை ஏற்றுக்கொள்ளாமல் அவரைக் குற்றப்படுத்தும் வழிகளைப் பின்பற்றி நடக்கும் உயிர்களைப் பிரளய காலத்தில் மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக, அந்த உயிர்கள் தன் மேல் உண்மையான அன்பை வைக்க முடியாதபடி அவற்றின் தலையின் உச்சியில் இருந்து ஆட்சி செய்யும் ஆணவத்தை இறைவன் தேடிச் சென்று அழித்து, அவர்களையும் ஆட்கொண்டான். தன் மீது அன்பு கொண்ட அடியவர்களை மட்டுமே காப்பாற்றுவான் என்பதில்லை; தன்னைப் பழிக்கும் உயிர்களையும் காப்பாற்றும் பெருங் கருணை கொண்டவன் அவன். பின்பு, விண்ணுலகத் தேவர்களும் குற்றம் கூற முடியாதபடி புதிய உலகங்களையும் புதிய உயிர்களையும் அவன் உருவாக்கினான்.
To save, from the great destruction at the time of the cataclysm, the souls who walk on following the ways that fault God without accepting him, he sought out and destroyed the anavam that rules from the crown of their heads and keeps them from setting true love upon him, and he took even those souls into his grace. It is not that he saves only the devotees who hold love for him; his is the great compassion that saves even the souls who revile him. Afterwards he made new worlds and new souls, in such a way that not even the devas of the sky world could find fault with them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை ஏற்றுக்கொள்ளாமல் அவரைக் குற்றப்படுத்தும் வழிகளைப் பின்பற்றி நடக்கும் உயிர்களைப் பிரளய காலத்தில் மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக,
To save, from the great destruction at the time of the cataclysm, the souls who walk on following the ways that fault God without accepting him,
- வரி 2Line 2
அந்த உயிர்கள் தன் மேல் உண்மையான அன்பை வைக்க முடியாதபடி அவற்றின் தலையின் உச்சியில் இருந்து ஆட்சி செய்யும் ஆணவத்தை,
the anavam that rules from the crown of their heads and keeps those souls from setting true love upon him,
- வரி 3Line 3
இறைவன் தேடிச் சென்று அழித்து அவர்களையும் ஆட்கொண்டான்; தன் மீது அன்பு கொண்ட அடியவர்களை மட்டுமே காப்பாற்றுவான் என்பதில்லை, தன்னைப் பழிக்கும் உயிர்களையும் காப்பாற்றும் பெருங் கருணை கொண்டவன் அவன்.
God sought out and destroyed, and he took even those souls into his grace; it is not that he saves only the devotees who hold love for him, for his is the great compassion that saves even the souls who revile him.
- வரி 4Line 4
விண்ணுலகத் தேவர்களும் குற்றம் கூற முடியாதபடி புதிய உலகங்களையும் புதிய உயிர்களையும் அவன் உருவாக்கினான்.
He made new worlds and new souls, in such a way that not even the devas of the sky world could find fault with them.
திருமந்திரம் பாடல் #366





