தொடர்ந்து படிக்கread this section continuously
சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்திஅமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரேதிகைத்ததெண் ணீரிற் கடலொலி யோசைமிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.
உரைmeaning
பிரளயத்தின்போது எழுந்த கடலோசையைக் கேட்டு உலகத்தவர் திகைத்துப்போயினர். பேரொளி மிக்க நெருப்பு மலையாய் இருந்த சதாசிவமூர்த்தியை, அனைத்தையும் படைத்துச் சுயம்புவாய்த் தோன்றியவன் என மனத்தில் வைத்து வழிபட்ட உலகத்து உயிர்களுக்காக, கடல்நீர் வெள்ளமும் கடலோசையும் மேலும் பெருகிவிடாதிருக்க, அந்த நீருள் இறைவன் அக்னியை உண்டாக்கினான். பிரளயத்தை உண்டாக்கி அனைத்தையும் அழித்த அந்த இறைவனே, தன்னை வழிபட்டுச் சரணடைந்த உயிர்களைக் காப்பாற்றினான்.
Hearing the roar of the sea that rose during the cataclysm, the people of the world were struck with terror. For the sake of the world's beings, who had held in their hearts and worshipped him as the one who created everything and appeared self-born, Sadashivamurthi who stood there as a mountain of fire of great radiance, so that the ocean's flood and its roar would not swell any further, God created fire within that water. That same God who brought about the cataclysm and destroyed everything, saved the beings who worshipped him and took refuge in him.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பிரளயத்தின்போது எழுந்த கடலோசையைக் கேட்டு உலகத்தவர் திகைத்துப்போயினர்.
Hearing the roar of the sea that rose during the cataclysm, the people of the world were struck with terror.
- வரி 2Line 2
பேரொளி மிக்க நெருப்பு மலையாய் இருந்த சதாசிவமூர்த்தியை, அனைத்தையும் படைத்துச் சுயம்புவாய்த் தோன்றியவன் என மனத்தில் வைத்து வழிபட்ட உலகத்து உயிர்களுக்காக,
For the sake of the world's beings, who had held in their hearts and worshipped Sadashivamurthi, who stood there as a mountain of fire of great radiance, as the one who created everything and appeared self-born,
- வரி 3Line 3
கடல்நீர் வெள்ளமும் கடலோசையும் மேலும் பெருகிவிடாதிருக்க, அந்த நீருள் இறைவன் அக்னியை உண்டாக்கினான்.
so that the ocean's flood and its roar would not swell any further, God created fire within that water.
- வரி 4Line 4
பிரளயத்தை உண்டாக்கி அனைத்தையும் அழித்த அந்த இறைவனே, தன்னை வழிபட்டுச் சரணடைந்த உயிர்களைக் காப்பாற்றினான்.
That same God who brought about the cataclysm and destroyed everything saved the beings who worshipped him and took refuge in him.
திருமந்திரம் பாடல் #365





