திருமூலர் அருளிய திருமந்திரம்
6. சக்கரப் பேறு

இரண்டாம் தந்திரம் பாடல் 367–370 (4 பாடல்கள்)

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்கால்போதம் கையினோ டந்தரச் சக்கரமேல்போக வெள்ளி மலைஅம ராபதிபார்ப்போக மேழும் படைத்துடை யானே.

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்சக்கரந் தன்னைத் தரிக்கஒண் ணாமையால்மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்தக்கநற் சக்தியைத் தான்கூறு செய்ததே.

கூறது வாகக் குறித்துநற் சக்கரம்கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்கூறது செய்து கொடுத்தனன் சக்திக்குக்கூறது செய்து தரித்தனன் கோலமே.

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானும்சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விடஅக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.

திருமந்திரம் பாடல் #367

1 / 4

0:000:00
6. சக்கரப் பேறுபாடல் 367

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout