தொடர்ந்து படிக்கread this section continuously
அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டுலகார் அழலைக்கண் டுள்வீழா தோடிஅலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.
உரைmeaning
பாடல் #362ல் உள்ளபடி, பேரொளி மிகுந்த நெருப்பு மலையாக நின்ற சதாசிவமூர்த்தி, கடலை ஊடுருவிக் கீழேயும், வானத்தை ஊடுருவி மேலேயும் நிறைந்து, வானவர்கள் அனைவருக்கும் தலைவன் என்னும் பெயர் பெற்றார். உலகம் முழுவதும் நிறைந்த ஊழித்தீயில் உலக மக்கள் நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்துவிடாதபடி, யாரும் அஞ்சாதீர்கள் என்று கூறி அருள் செய்தார்.
As in verse 362, Sadashivamurthi, who stood as the mountain of fire filled with great light, pervaded downward through the sea and upward through the sky, and won the name of lord over all the celestials. So that the people of the world, seeing the mass of fire that filled the whole world in that age-ending blaze, would not grow afraid and fall into the flood waters, he said, "Let none of you fear," and granted his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #362ல் உள்ளபடி, நெருப்பு மலையாக நின்ற சதாசிவமூர்த்தி கடலை ஊடுருவிக் கீழேயும் வானத்தை ஊடுருவி மேலேயும் நிறைந்தார்.
As in verse 362, Sadashivamurthi, standing as the mountain of fire, pervaded downward through the sea and upward through the sky.
- வரி 2Line 2
வானவர்கள் அனைவருக்கும் தலைவன் என்னும் பெயர் பெற்றார்.
He won the name of lord over all the celestials.
- வரி 3Line 3
உலகம் முழுவதும் நிறைந்த ஊழித்தீயில் உலக மக்கள் நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்துவிடும் நிலைமை ஏற்பட்டது.
In the age-ending blaze that filled the whole world, the people of the world saw the mass of fire and were in danger of falling in fear into the flood waters.
- வரி 4Line 4
யாரும் அஞ்சாதீர்கள் என்று கூறி அருள் செய்தார்.
He said, let none of you fear, and granted his grace.
திருமந்திரம் பாடல் #363





