அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கிமுடிசேர் மலைமக னார்மக ளாகித்திடமாத வஞ்செய்து தேவர் அறியப்படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.
இரண்டாம் தந்திரம் பாடல் 347–352 (6 பாடல்கள்)
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானைஅரியனென் றெண்ணி அயர்வுற வேண்டாபுரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்பரிவொடு நின்று பரிசறி வானே.
ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழிவாழிப் பிரமருக்கும் வாள்கொடுத் தானே.
தாங்கி இருபது தோளுந் தடவரைஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலிஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்நீங்காத அருள்செய்தான் நின்மலன் தானே.
உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டிஅறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதைசெறுவகை செய்து சிதைப்ப முனிந்துமறுமழு வால்வெட்டி மாலை பெற்றானே.
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்றுநாடி இறைவா நமஎன்று கும்பிடஈடுஇல் புகழோன் எழுகவென் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #347
1 / 6
0:000:00
3. இலிங்க புராணம்பாடல் 347




