திருமூலர் அருளிய திருமந்திரம்
2. பதிவலியில் வீரட்டம் எட்டு

இரண்டாம் தந்திரம் பாடல் 339–346 (8 பாடல்கள்)

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டுநிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே.

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னறஅங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.

எங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்றஅங்க முதல்வன் அருமறை யோதிபால்பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்முப்புர மாவது மும்மல காரியம்அப்புரம் எய்தமை யாருமறி யாரே.

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்அத்தி யுரியர னாவ தறிகிலர்சத்தி கருதிய தாம்பல தேவரும்அத்தீயின் உள்ளெழுந்த தன்று கொலையே.

மூலத் துவாரத்து மூளும் ஒருவனைமேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

இருந்த மனத்தை இசைய இருத்திப்பொருந்தி இலிங்க வழியது போக்கித்திருந்திய காமன் செயலழித் தங்கண்அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்தே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #339

1 / 8

0:000:00
2. பதிவலியில் வீரட்டம் எட்டுபாடல் 339

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com