திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 345

இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு

தொடர்ந்து படிக்கread this section continuously

மூலத் துவாரத்து மூளும் ஒருவனைமேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

உரை

மிருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்துவவதி தேவியாரும் தமக்குக் குழந்தைப் பேறு வேண்டி இறைவனை வேண்ட, குறைந்த ஆயுளுடைய அறிவாளியான குழந்தை வேண்டுமா, அல்லது நீண்ட ஆயுளுடைய அறிவற்ற குழந்தை வேண்டுமா என்று இறைவன் அவர்களைக் கேட்டார். அவர்கள் அறிவாளியான குழந்தையையே கேட்டு, மார்க்கண்டேயன் என்னும் குழந்தையைப் பெற்றனர். மார்க்கண்டேயர் பிறந்ததிலிருந்தே, அவரது பெற்றோர் ஆயுள் முடியும்போது இறைவனையே சரணடைய வேண்டும் என்று அவருக்குப் போதித்து வந்தனர். அதனால் மிகச்சிறந்த இறை பக்தரான மார்க்கண்டேயர் தம் வாழ்நாள் முழுவதையும் இறை பூஜையிலேயே கழித்தார். அவரது ஆயுட்காலம் முடியும் நாளில், மேலுலகிற்கு அழைத்துச் செல்ல வந்த எமதர்மன், எந்தப் பூஜையில் இருந்தாலும் ஆயுள் முடிந்தவரை அழைத்துச் செல்வது தம் கடமை என்று எண்ணி, அவர்மேல் பாசக் கயிற்றை வீசினார். சிவபூஜையில் இருந்த மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கட்டி அணைத்திருந்த நேரமாதலால், அந்தப் பாசக்கயிறு அவரோடு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. உடனே அதிலிருந்து இறைவன் வெளிப்பட்டு, என் பூஜையில் இருக்கும் அடியவர் எவரையும் கொண்டு செல்லும் உரிமை உமக்கு இல்லை என்று எமதர்மனைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதுடன் சிரஞ்சீவியாக இருக்கும் வரம் அளித்தார்.

வரி வாரியாக

  • வரி 1

    மிருகண்டு முனிவரும் மருத்துவவதி தேவியாரும் குழந்தைப் பேறு வேண்ட, அறிவாளியான குறைந்த ஆயுள் குழந்தையையே தேர்ந்து மார்க்கண்டேயனைப் பெற்றனர்.

  • வரி 2

    பெற்றோர் போதித்தபடி, மார்க்கண்டேயர் தம் வாழ்நாள் முழுவதையும் இறை பூஜையிலேயே கழித்தார்.

  • வரி 3

    ஆயுள் முடியும் நாளில், சிவபூஜையில் சிவலிங்கத்தைக் கட்டி அணைத்திருந்த மார்க்கண்டேயர்மேல் எமதர்மன் வீசிய பாசக்கயிறு, லிங்கத்தின்மீதும் விழுந்தது.

  • வரி 4

    இறைவன் அதிலிருந்து வெளிப்பட்டு எமதர்மனை உதைத்துத் தள்ளிவிட்டு, மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதுடன் சிரஞ்சீவியாக இருக்கும் வரம் அளித்தார்.

திருமந்திரம் பாடல் #345

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout