திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 344

இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு

தொடர்ந்து படிக்கread this section continuously

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்அத்தி யுரியர னாவ தறிகிலர்சத்தி கருதிய தாம்பல தேவரும்அத்தீயின் உள்ளெழுந்த தன்று கொலையே.

உரை

தாருகா வனத்திலிருந்த முனிவர்கள் இறைவனை வணங்காமல், இறைவனின் அருளை விடத் தங்கள் மந்திர சக்தியே பெரியது, தாம் கற்ற மந்திரங்களால் எதையும் அடையலாம் என்னும் அகங்காரத்தில் இருந்தனர். இவர்களின் அறியாமையைப் போக்க இறைவன் அழகிய உருவம் கொண்ட பிக்ஷாடனராகத் தோன்றி, அந்த முனிவர்களின் வீடுகளுக்குச் சென்று, அங்கிருந்த முனி பத்தினிகள் முன்னால் பிச்சை கேட்டு நின்றார். அவரின் அழகில் மயங்கிய முனி பத்தினிகள் மயக்கத்தில் அவர் பின்னாலேயே கூடி வர ஆரம்பித்தனர். தங்கள் பத்தினியர் இப்படி ஒரு ஆடவனின் பின்னால் மயங்கி வருவதைக் கண்டு கோபமுற்ற முனிவர்கள், தம் தவ வலிமையால் மூன்றுவிதமான தீயை வளர்த்து, மந்திரங்களால் (ஆகவனீயம் என்னும் காட்டுத்தீ, காருகபத்தியம் என்னும் வீட்டுத்தீ, தட்சிணாக்கினியம் என்னும் ஏட்டுத்தீ) கரிய நிறமுடைய ஒரு பெரிய யானையைத் தோன்றுவித்தனர். யாகத் தீயில் தோன்றிய அந்த யானை அவரை அழித்துவிடும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அத்தீயிலிருந்து வெளிவந்த யானையை, காடே அதிரும்படி பிளந்து கொன்று, அதன் தோலைத் தமக்குப் போர்வையாகப் போர்த்திக்கொண்டார். மூன்று வகையான அந்த நெருப்பும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும், அம்மந்திரங்களின் பலனாக வரும் பலனும் அனைத்தும் தாமேயென்று தாருகா வனத்து முனிவர்களுக்கு உணர்த்தினார். இப்புராணநிகழ்வு நடந்த இடம் திருவழுவூர் தலமாகும்.

உயிர்களுக்கு வரும் கோபத்தால் நான் என்னும் அகங்காரம் அதிகரித்து, தாம் என்ன செய்கின்றோம் என்ன பேசுகின்றோம் என்பதே தெரியாமல் மதம் பிடித்த யானையைப்போல் இருக்கும்போது, உயிர்கள் இறைவனை சரணடைய, இறைவன் அந்தக் கோபத்தையும் அகங்காரத்தையும் அழித்து, அனைத்தும் தாமேயென்று உணர்த்துகிறார்.

வரி வாரியாக

  • வரி 1

    தாருகா வனத்திலிருந்த முனிவர்கள், இறைவனின் அருளை விடத் தங்கள் மந்திர சக்தியே பெரியது என்னும் அகங்காரத்தில் இருந்தனர். இவர்களின் அறியாமையைப் போக்க இறைவன் பிக்ஷாடனராகத் தோன்றி முனி பத்தினியர் முன் பிச்சை கேட்டார்.

  • வரி 2

    அவரின் அழகில் மயங்கிய முனி பத்தினியர் மயக்கத்தில் அவர் பின்னாலேயே கூடி வர, கோபமுற்ற முனிவர்கள் மூன்றுவிதமான தீயால் ஒரு பெரிய யானையைத் தோன்றுவித்தனர்.

  • வரி 3

    யாகத் தீயில் தோன்றிய அந்த யானையை இறைவன் காடே அதிரும்படி பிளந்து கொன்று, அதன் தோலைத் தமக்குப் போர்வையாகப் போர்த்திக்கொண்டார்.

  • வரி 4

    மூன்று வகையான நெருப்பும், மந்திரங்களும், அவற்றின் பலனும் தாமேயென முனிவர்களுக்கு உணர்த்தினார். கோபத்தால் அகங்காரம் மதம் பிடித்த யானையாகும்போது, சரணடையும் உயிர்களின் அக்கோபத்தையும் அகங்காரத்தையும் இறைவன் அழிக்கிறார்.

திருமந்திரம் பாடல் #344

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout