திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 342

இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு

தொடர்ந்து படிக்கread this section continuously

எங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்றஅங்க முதல்வன் அருமறை யோதிபால்பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.

உரை

அனைத்து உயிர்களுக்குள்ளும் எங்கும் எதிலும் பிரிக்கமுடியாதபடி கலந்திருப்பவனும், அனைத்து உயிர்களும் உய்ய வேதங்களை உலகிற்கு ஓதி அந்த வேதத்திற்கே முதல்வனாயும் இருப்பவனுமான இறைவனை உணராமல், உயிர்கள் வீணாக ஒருவர்மேல் ஒருவர் குரோதம்கொண்டு, ஆத்திரத்தில் அறிவிழந்து, அடுத்த உயிருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதை உணராமல், அந்த உயிரை அழிக்கப் பல கெட்ட செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் இறைவா காப்பாற்று என்று வேண்டிட, குரோதம் என்னும் அசுர குணத்தை, உயிர்களிடமுள்ள சக்திமய சக்கரங்களைக் கருவியாகக் கொண்டு, இறைவன் தன் திருவடி மூலம் அழித்தான்.

இப்பாடலுக்குரிய புராணம் நிகழ்ந்த இடம் திருவிற்குடி தலமாகும். ஒரு முறை இந்திரன் தான் என்னும் அகந்தையுடன் சிவனைத் தரிசிக்கக் கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் ஒரு சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று உள்ளே செல்ல விடாமல் தடுத்தார். கோபம்கொண்ட இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். சினத்தில் சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். காவல் காப்பவர் சிவனே என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலுக்கு மன்னிப்பு வேண்டினான். அந்நேரம் கோபத்தால் அவன் உடலில் தோன்றிய வியர்வைத் துளி பாற்கடலில் விழுந்தது; அதிலிருந்து ஒரு குழந்தை தோன்றியது. அக்குழந்தை பிரம்மனின் தாடியைப் பிடித்து இழுக்க, வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அத்துளியும் குழந்தையின்மேல் விழுந்தது. இவ்வாறு சிவனின் வியர்வைத் துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர்த் துளி ஆகிய நீரால் உருவான குழந்தைக்கு ஜலந்தராசுரன் எனப் பெயரிடப்பட்டது. அவன் பெரியவனான பின் மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும் சாகா வரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசுரன், தன் தர்மபத்தினியான பிருந்தை எப்போது மனத்தளவில் கெடுகிறாளோ அப்போது தனக்கு அழிவு வரட்டும் எனும் வரம் வாங்கிக்கொண்டான். இவனது அட்டகாசம் மிகுந்து, கடைசியில் சிவனையே அழிக்கச் சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டமிட்டு, இந்தச் சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை, அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம்கொண்ட ஜலந்தரன், தன் மனைவியின் கற்பின் திறத்தால் தனக்கு அழிவு வராது என்று சவால்விட்டான். இந்நேரம் திருமாலை அழைத்த சிவன், நீ ஜலந்தராசுரன் வடிவெடுத்து அவனது மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவனே வந்திருக்கிறார் என நினைத்த பிருந்தை அவரை வீட்டிற்குள் அழைத்தாள். ஒரு நொடியில் மாற்றானைத் தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரம் சக்கரத்தை அசுரன் எடுத்துத் தலையில் வைக்க, அது அவன் கழுத்தைத் துண்டித்துவிட்டது.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உயிர்களுக்குள்ளும் பிரிக்கமுடியாதபடி கலந்திருப்பவனும், வேதங்களுக்கே முதல்வனுமான இறைவனை உணராமல், உயிர்கள் வீணாக ஒருவர்மேல் ஒருவர் குரோதம் கொண்டு, ஆத்திரத்தில் அறிவிழந்து, அடுத்த உயிரையும் அழிக்க கெட்ட செயல்கள் செய்கின்றனர்.

  • வரி 2

    உயிர்கள் இறைவா காப்பாற்று என்று வேண்டிட, குரோதம் என்னும் அசுர குணத்தை, உயிர்களிடமுள்ள சக்திமய சக்கரங்களைக் கருவியாகக் கொண்டு இறைவன் தன் திருவடி மூலம் அழித்தான்.

  • வரி 3

    திருவிற்குடியில் நிகழ்ந்த புராணப்படி, ஆணவம் கொண்ட இந்திரன் சிவனை வஜ்ராயுதத்தால் அடிக்க, சினத்தில் தோன்றிய வியர்வைத் துளியும் பிரம்மனின் கண்ணீர்த் துளியும் பாற்கடல் நீரும் சேர்ந்து ஜலந்தராசுரன் என்னும் குழந்தை தோன்றியது.

  • வரி 4

    மூவுலகையும் சாகா வரத்தையும் மறுத்த பிரம்மன், மனைவி பிருந்தையின் கற்பையே அவனது துணையாக்கினான். ஜலந்தரன் சிவனை அழிக்கச் செல்ல, சிவன் தந்த சக்கரத்தை அவனே தலையில் வைக்க, திருமால் மனைவியின் முன் சென்று அவள் மனம் களங்கமடைந்த அதே நொடியில் அச்சக்கரம் அவன் கழுத்தைத் துண்டித்தது.

திருமந்திரம் பாடல் #342

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout