திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 352

இரண்டாம் தந்திரம்3. இலிங்க புராணம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்றுநாடி இறைவா நமஎன்று கும்பிடஈடுஇல் புகழோன் எழுகவென் றானே.

உரை

தேவர்கள் எல்லோரும், தமக்குத் துன்பம் நேரும்போதெல்லாம் வாடிய முகத்துடன் மனம் வருந்தி, இறைவனை விரும்பிச் சென்று, இறைவா நமசிவாய என்று திருவடி பணிந்து கும்பிட, ஈடு இணையில்லாத புகழுடைய இறைவன் அவர்கள்மேல் கருணை கொண்டு, எழுக என்று கூறி, அவர்களது துயரங்களைத் தீர்த்தான்.

தமக்குள் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்த உயிர்களுக்கு, படைக்கும் பிரம்மனின் தொழிலையும் காக்கும் திருமாலின் தொழிலையும் அளித்து, அவர்களுக்குத் தேவர் என்னும் தகுதியையும் அளிப்பான் இறைவன். அவ்வாறு உணர்ந்த லிங்க தத்துவத்தை இறைவா நமசிவாய என்று வழிபட, ஈடு இணையில்லாத புகழுடைய இறைவன் அவர்கள்மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி, பிறவா நிலையை அவர்களுக்கு அருள்வான். லிங்க வடிவின் தத்துவமும் இறைவனும் ஒன்றே என்பதே இப்பாடலின் பொருள்.

வரி வாரியாக

  • வரி 1

    தேவர்கள் எல்லோரும், தமக்குத் துன்பம் நேரும்போதெல்லாம் வாடிய முகத்துடன் மனம் வருந்தி இறைவனை விரும்பிச் சென்றனர்.

  • வரி 2

    திருவடி பணிந்து இறைவா நமசிவாய என்று கும்பிட்டனர்.

  • வரி 3

    ஈடு இணையில்லாத புகழுடைய இறைவன் அவர்கள்மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி, அவர்களது துயரங்களைத் தீர்த்தான்.

  • வரி 4

    இதே வண்ணமே, தமக்குள் லிங்க தத்துவத்தை உணர்ந்து நமசிவாய என்று வழிபடும் உயிர்களுக்கும், இறைவன் கருணை கொண்டு பிறவா நிலையை அருள்வான்.

திருமந்திரம் பாடல் #352

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout