திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 348

இரண்டாம் தந்திரம்3. இலிங்க புராணம்

தொடர்ந்து படிக்கread this section continuously

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானைஅரியனென் றெண்ணி அயர்வுற வேண்டாபுரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்பரிவொடு நின்று பரிசறி வானே.

உரை

எல்லா உயிர்களிடமும் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன், கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிச் சோர்ந்துபோக வேண்டாம். உண்மையான அன்புடன் தம்மைப் பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்லன். பாடல் #347ல் உள்ளபடி, தமக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் பேரன்புடனும் பெருங்கருணையுடனும் நின்று, அவர்களது பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.

வரி வாரியாக

  • வரி 1

    எல்லா உயிர்களிடமும் இருக்கும் மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன், கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிச் சோர்ந்துபோக வேண்டாம்.

  • வரி 2

    உண்மையான அன்புடன் தம்மைப் பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்லன்.

  • வரி 3

    பாடல் #347ல் உள்ளபடி, தமக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் அவன் நிற்கிறான்.

  • வரி 4

    பேரன்புடனும் பெருங்கருணையுடனும் நின்று, அவர்களது பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.

திருமந்திரம் பாடல் #348

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout