கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்எய்தி அவனை இசையினால் ஏத்துமின்ஐவருடைய அவாவினில் தோன்றியபொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.
உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்கணுவின்றி வேதா கமநெறி காணான்பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
மந்திர தந்திர மாயோக ஞானமும்பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டுஅந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.
ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்காமாதி நீங்காக் கலதி கலதிகட்குஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்கோமான் அலன்அசத் தாகும் குரவனே.
கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றேமுற்பால நந்தி மொழிந்துவைத் தானே.
குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவேகுருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.
தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குருதாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே.
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்தவிரவைத் தான் பிற வித்துயர் தானே.
கறுத்த இரும்பே கனகமது ஆனால்மறித்துஇரும் பாகா வகையது போலக்குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்மறித்துப் பிறவியல் வந்தணு கானே.
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்நேசத்து நாடி மலமற நீக்குவோர்ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே.
நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்றநேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனேஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்றநேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.
பரிசன வேதி பரிசித்தது எல்லாம்வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்குருபரி சித்த குவலயம் எல்லாம்திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே.
தானே எனநின்ற சற்குரு சந்நிதிதானே எனநின்ற தன்மை வெளிப்படில்தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே.
வரும்வழி போம்வழி மாயா வழியைக்கருவழி கண்டவர் காணா வழியைக்பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்குருவழியே சென்று கூடலும் ஆமே.
குருஎன் பவனே வேதாக மங்கூறும்பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்துஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கிவருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே.
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே.
ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினைபற்றறு நாதன் அடியில் பணிதலால்சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே.
எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியேசெலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே.
ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித்தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்றுமோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே.
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே.
ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலைநேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறைதேசத்தை எல்லாம் தெளியவைத் தானே.
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்ததுபேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்தஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே.
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்கஇசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறேஅசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கேஇசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே.
ஏறு நெறியே மலத்தை எரித்தலால்ஈறில் உரையால் இருளை அறுத்தலான்மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுககூறு பரனே குருவாம் இயம்பிலே.
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்கண்காணி கண்டார் களஒழிந் தாரே.
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.
பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும்மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளதுவித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே.
வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லைநடக்க உறுவரே ஞானமி ல்லாதார்வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்காயத்துள் நின்ற கருத்தறி யாரே.
கண்காணி யாகவே கையகத் தேயெழும்கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்கண்காணி யாகிய காதலன் தானே.
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறைமன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறைதன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறைஎன்னிது ஈசன் இயல்புஅறி யாரே.
காணாத கண்ணில் படலமே கண்ணொளிகாணாத வர்கட்கும் காணாதது அவ்வொளிகாணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்காணாது கண்டார் களவொழிந் தாரே.
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதிஉய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளிஅத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே.
பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும்பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்நிராமய மாக நினைப் பொழிந் தாரே.
ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்குஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடாஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே.
உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே.
உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வைஅயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்சிலவாணி யாகிய தேவர் பிரானைத்தலைவாணி செய்வது தன்னை அறிவதே.
தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழிகோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே.
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லைநல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.
இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்வந்தன சூக்க உடலன்று மானதுதந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே.
வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.
போது சடக்கெனப் போகின் றதுகண்டும்வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவதுநீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்துஆதியை அன்பில் அறியகில் லார்களே.
கடன்கொண்டு நெற்குத்துக் கையரைஉடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறிஇடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்துபுரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்னபரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.
நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்அன்றி உலகம் அதுஇது தேவுஎன்றுகுன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.
இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்துஇன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்துதுன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்றுதுன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்பெறுதற்கு அரிய பிரானடி பேணார்பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே.
ஆர்வ மனமும் அளவில் இளமையும்ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்தீர வருவதோர் காமத் தொழில்நின்றுமாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.
இப்பரி சேஇள ஞாயிறு போலுருஅப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானைஇப்பரி சேகம லத்துறை ஈசனைமெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



