விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்துஅந்த அபரம் பரநாத மாகியேவந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்துஉந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே.
உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்குஉள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே.
தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்மூவர் பிரான்என முன்னொரு காலத்துநால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.
பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தைமையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறுசெய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.
தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்கஅனித்திடும் மேலை அருங்கனி ஊறல்கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.
நேரறி வாக நிரம்பிய பேரொளிபோரறி யாது புவனங்கள் போய்வரும்தேரறி யாத திசையொளி யாயிடும்ஆரறி வாரிது நாயக மாமே.
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.
நாபிக்கண் நாசிநயன நடுவினும்தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்மூவரு மாக உணர்ந்திருந் தாரே.
அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம்துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்துஅடங்கிட நின்றதும் அப்பரி சாமே.
தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்தானே வெளியொளி தானிருட் டாமே.
தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்வையம் புனல்அனல் மாருதம் வானகம்சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே.
உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்பன்னு மறைகள் பயிலும் பரமனைஎன்னுள் இருக்கும் இளையா விளக்கினைஅன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.
அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்பின்ன மடஅன்னம் பேறணு காதே.
வைகரி யாதியும் மாயா மலாதியும்பொய்கரி யான புருடாதி பேதமும்மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானைஅணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவில் அணுவை அணுகவல் லார்கட்குஅணுவில் அணுவை அணுகலும் ஆமே.
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்யஇடர்கொண்ட பாச இருளற ஒட்டிநடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே.
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்கணுஅற நின்ற கலப்பது உணரார்இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்தணிவற நின்றான் சராசரம் தானே.
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டுமேவிய கூறது ஆயிரம் ஆயினால்ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே.
ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறைஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்தானே அறியும் தவத்தின் அளவே.
உண்டு தெளிவன் உரைக்க வியோகமேகொண்டு பயிலும் குணமில்லை யாயினும்பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்நன்றே நினைமின் நமனில்லை நாணாமேசென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்துநின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.
கற்ற பசுக்கள் கதறித் திரியினும்கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும்மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.
கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டிவல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லதுகொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே.
சீவன் எனச்சிவன் என்னவே றில்லைசீவ னார்சிவ னாரை அறிகிலர்சீவ னார்சிவ னாரை அறிந்தபின்சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே.
குணவிளக் காகிய கூத்தப் பிரானும்மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்பணவிளக் காகிய பல்தலை நாகம்கணவிளக் காகிய கண்காணி யாகுமே.
அறிவாய் அறியாமை நீங்கி யவனேபொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.
ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்குஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்திஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே.
சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்தவமான செய்து தலைப்பறி கின்றார்நவமான தத்துவம் நாடாகி லாரே.
நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே.
ஆக மதத்தன ஐந்து களிறுளஆக மதத்தறி யோடுஅணை கின்றிலபாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே.
கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயாஎருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கேவருத்தினும் அம்மா வழிநட வாதே.
புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்துகுலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்உலம்வந்து போம்வழி ஒன்பது தானே.
அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வனஅஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.
ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே.
சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குளவெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே.
எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறைஎண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே.
விதியின் பெருவலி வேலைசூழ் வையம்துதியின் பெருவலி தொல்வான் உலகம்மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கைநிதியின் பெருவலி நீர்வலி தானே.
குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வனபட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்துஇட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே.
கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம்அடக்க லுறும் அவன்தானே அமரன்விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தைநடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலைஅஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டுஅஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
முழக்கி எழுவன மும்மத வேழம்அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன்பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவதுஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவதுஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவதுஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே.
இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்தகிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளிசார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டுவாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்வேய்ந்துகொள் மேலை விதியது தானே.
நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில்படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே.
சென்றன நாழிகை நாள்கள் சிலபலநின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்துவென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்குன்று விழவதில் தாங்கலும் ஆமே.
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனைஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே.
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளேஅரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



