நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே.
உயிர்க்குயி ராய்நிற்ற லொண்ஞான பூசையுயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசையுயிர்பெறு மாவா கனம்புறப் பூசைசெயற்கிடை நேசஞ் சிவபூசை தானே.
நாடு நகரமு நற்றிருக் கோயிலுந்தேடித் திரிந்து சிவபெருமா னென்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.
பத்தர் சரிதைப் படுவார் கிரிகையோரத்தகு கொண்டா ரருள்வேடத் தாகுவோர்சுத்த வியமாதி சாக்கரத் தூயோகர்சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே.
சார்ந்தமெஞ் ஞானத்தோர் தானவ னாயற்றோர்சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோராய்ந்த கிரிகையோ ரர்சனை தப்பாதோர்நேர்ந்த சரிதையோர் நீணிலத் தோர்களே.
கிரிகையில் யோகங் கிளர்ஞான பூசையரிய சிவனுரு வமா மரூபந்தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசையுரியன நேயத் துயர்பூசை யாமே.
சரிதாதி நான்குந் தகுஞான நான்கும்விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்பொருளா னதுநந்தி பொன்னகர் போந்துமருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.
சமயம் பலசுத்தி தன்செய லற்றிடுமமையும் விசேடமு மரன்மந்திர சுத்திசமய நிருவாணங் கலாசுத்தி யாகுமமைமன்னு ஞானமார்க் கம்மபி டேகமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1443
1 / 8




