தொடர்ந்து படிக்கread this section continuously
பத்தர் சரிதைப் படுவார் கிரிகையோரத்தகு கொண்டா ரருள்வேடத் தாகுவோர்சுத்த வியமாதி சாக்கரத் தூயோகர்சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே.
உரைmeaning
இறைவனை அடையும் வழிமுறையான சரியையை மேற்கொண்டு கிரியைகளைச் செய்கின்றவர்களே பக்தர்கள் ஆவார்கள். அந்தக் கிரியைகளின் செயலின் தன்மையையே தாமும் அடைந்து, அதன் பயனால் அருள் வடிவத்தில் இறை தன்மையாகவே அவர்கள் ஆகின்றார்கள். அதனால் மலம் நீங்கி சுத்தமாகிய தமது உடலுக்குள்ளே ஆதியிலிருந்தே இருக்கின்ற ஆன்மாவானது எது என்பதை உணர்ந்துகொண்டு தூய்மையான யோகிகள் ஆகின்றார்கள். அதன்பிறகு பரம்பொருளான சிவத்தின் உண்மை ஞானத்தைத் தமக்குள்ளே சென்று உணர்ந்தடைந்து சித்தர்கள் ஆகின்றார்கள்.
Those who undertake Sariyai, the method by which one reaches God, and perform kriyas, are Bhaktas. They themselves attain the very nature of what those kriyas accomplish, and, by that fruit, come to have the nature of God himself in a form of grace. Thereby, with impurity removed and their body made pure, they come to realize what the soul is that has dwelt within it from the beginning, and become pure Yogis. After that, going within themselves and realizing and attaining the true wisdom of Sivam, the Supreme, they become Siddhars.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடையும் வழிமுறையான சரியையை மேற்கொண்டு கிரியைகளைச் செய்கின்றவர்களே பக்தர்கள் ஆவார்கள்.
Those who undertake Sariyai, the method by which one reaches God, and perform kriyas, are Bhaktas.
- வரி 2Line 2
அந்தக் கிரியைகளின் செயலின் தன்மையையே தாமும் அடைந்து, அதன் பயனால் அருள் வடிவத்தில் இறை தன்மையாகவே அவர்கள் ஆகின்றார்கள்.
They themselves attain the very nature of what those kriyas accomplish, and, by that fruit, come to have the nature of God himself in a form of grace.
- வரி 3Line 3
அதனால் மலம் நீங்கி சுத்தமாகிய தமது உடலுக்குள்ளே ஆதியிலிருந்தே இருக்கின்ற ஆன்மாவானது எது என்பதை உணர்ந்துகொண்டு தூய்மையான யோகிகள் ஆகின்றார்கள்.
Thereby, with impurity removed and their body made pure, they come to realize what the soul is that has dwelt within it from the beginning, and become pure Yogis.
- வரி 4Line 4
அதன்பிறகு பரம்பொருளான சிவத்தின் உண்மை ஞானத்தைத் தமக்குள்ளே சென்று உணர்ந்தடைந்து சித்தர்கள் ஆகின்றார்கள்.
After that, going within themselves and realizing and attaining the true wisdom of Sivam, the Supreme, they become Siddhars.
திருமந்திரம் பாடல் #1446





