திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1447

தொடர்ந்து படிக்கread this section continuously

சார்ந்தமெஞ் ஞானத்தோர் தானவ னாயற்றோர்சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோராய்ந்த கிரிகையோ ரர்சனை தப்பாதோர்நேர்ந்த சரிதையோர் நீணிலத் தோர்களே.

உரை

இறைவனை சார்ந்து நின்று உண்மை ஞானத்தை அடைந்தவர்கள் தாமே இறைவனாக ஆகி, தான் எனும் தன்மை இல்லாதவர்களாக ஆகிறார்கள். இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் எண்ணங்களால் யோகத்தில் மேல்நிலை பெற்ற யோகியர்கள் சித்தர்களாக ஆகி சமாதி நிலையில் இருக்கிறார்கள். இறைவனை அடைவதற்கான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்துகொண்டு அதன்படியே கிரியை செய்கின்றவர்கள், அதற்காகச் செய்யும் பூசைகளை முறைப்படி தவறாமல் செய்கின்றவர்களாக இருக்கிறார்கள். இறைவனை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு சரியை செய்கின்றவர்கள் நீண்ட காலம் இந்த உலகத்திலேயே இருக்கிறார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனைச் சார்ந்து நின்று உண்மை ஞானத்தை அடைந்தவர்கள் தாமே இறைவனாக ஆகி, தான் எனும் தன்மை இல்லாதவர்களாக ஆகிறார்கள்.

  • வரி 2

    இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் எண்ணங்களால் யோகத்தில் மேல்நிலை பெற்ற யோகியர்கள் சித்தர்களாக ஆகிச் சமாதி நிலையில் இருக்கிறார்கள்.

  • வரி 3

    இறைவனை அடைவதற்கான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்துகொண்டு கிரியை செய்கின்றவர்கள், அதற்குரிய பூசைகளை முறைப்படி தவறாமல் செய்கின்றவர்களாக இருக்கிறார்கள்.

  • வரி 4

    இறைவனை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு சரியை செய்கின்றவர்கள் நீண்ட காலம் இந்த உலகத்திலேயே இருக்கிறார்கள்.

திருமந்திரம் பாடல் #1447

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout