தொடர்ந்து படிக்கread this section continuously
கிரிகையில் யோகங் கிளர்ஞான பூசையரிய சிவனுரு வமா மரூபந்தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசையுரியன நேயத் துயர்பூசை யாமே.
உரைmeaning
கிரியையில் வெளிப்புறமாகச் செய்யப்படும் பூசைகளை எண்ணத்தால் யோகத்தில் செய்து, தமக்குள் இருக்கும் அறிவைக் கிளர்ச்சி பெறச் செய்து எழுப்புவதே உயர்ந்த ஞான பூசையாகும். அதனால் கிடைப்பதற்கு மிகவும் அரியதான சிவ பரம்பொருளின் உண்மை உருவமாக இருக்கும், உருவமே இல்லாத அரூப நிலையை அறிந்துகொள்ளும் பக்குவத்தைப் பெறலாம். அந்தப் பக்குவத்தில் தேர்ச்சி பெற்றவர்க்கு ஏற்றதாக இருப்பது, இறைவன் மீது கொண்ட பேரன்பினால் செய்யப்படும் உயர்ந்த மானசீகப் பூசையே ஆகும்.
Doing in yoga, through thought, the worship that is performed outwardly in kiriyai, and thereby stirring and awakening the wisdom that lies within oneself, is the higher worship of jnana. Through it one may gain the maturity, most rare to attain, to know the formless state that is beyond form yet is the true form of Siva, the supreme reality. What suits one who has become skilled in that maturity is the higher mental worship performed out of great love for God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கிரியையில் வெளிப்புறமாகச் செய்யப்படும் பூசைகளை எண்ணத்தால் யோகத்தில் செய்து, தமக்குள் இருக்கும் அறிவைக் கிளர்ச்சி பெறச் செய்து எழுப்புவதே உயர்ந்த ஞான பூசையாகும்.
Doing, in yoga through thought, the worship performed outwardly in kiriyai, stirring and awakening the wisdom within, is the higher worship of jnana;
- வரி 2Line 2
அதனால், கிடைப்பதற்கு மிகவும் அரியதான, சிவ பரம்பொருளின் உண்மை உருவமாக இருக்கும் அரூப நிலையை அறிந்துகொள்ளும் பக்குவத்தைப் பெறலாம்.
through it one may gain the maturity, most rare to attain, to know the formless state that is the true form of Siva, the supreme reality;
- வரி 3Line 3
அந்தப் பக்குவத்தில் தேர்ச்சி பெற்றவர்க்கு ஏற்றதாக இருப்பது,
what is fitting for one who has become skilled in that maturity
- வரி 4Line 4
இறைவன் மீது கொண்ட பேரன்பினால் செய்யப்படும் உயர்ந்த மானசீகப் பூசையே ஆகும்.
is the higher mental worship performed out of great love for God.
திருமந்திரம் பாடல் #1448





