தொடர்ந்து படிக்கread this section continuously
நாடு நகரமு நற்றிருக் கோயிலுந்தேடித் திரிந்து சிவபெருமா னென்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.
உரைmeaning
உலகமெங்கும் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் அவற்றிலுள்ள நகரங்களிலும் உயிர்களின் நன்மைக்காக அமைக்கப்பட்டுள்ள இறைவன் வீற்றிருக்கும் கோயில்களைத் தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து, அங்கு வீற்றிருக்கின்ற இறை சக்தியைச் சிவம் எனும் பரம்பொருளாகவே எண்ணி, இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே பணிந்து தொழுது வணங்குமாறு இப்பாடல் கூறுகிறது. அவ்வாறு வணங்கியபின், அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் இறை சக்தியும் வணங்கித் தொழுத பக்தர்களோடு ஒன்றாகச் சேர்ந்து, அந்தப் பக்தர்களின் நெஞ்சத்தையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு அங்கே வீற்றிருக்கும் என்று பாடல் கூறுகிறது.
This verse calls on seekers to search out, roam and find the temples set up in every city of every land throughout the world for the good of living beings, where God dwells, and, holding the divine power enthroned there to be the Supreme called Sivam, to praise and glorify God, singing and bowing in worship. After such worship, the verse declares, that same divine power enthroned in the temple joins as one with the devotees who have bowed and worshipped, takes their very hearts as the temple it desires, and comes to dwell there.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகமெங்கும் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் அவற்றிலுள்ள நகரங்களிலும் உயிர்களின் நன்மைக்காக அமைக்கப்பட்டுள்ள இறைவன் வீற்றிருக்கும் கோயில்களைத் தேடி அலைந்து திரிந்து கண்டுபிடிக்குமாறு இப்பாடல் கூறுகிறது.
This verse calls on seekers to search out, roam and find the temples set up in every city of every land throughout the world for the good of living beings, where God dwells.
- வரி 2Line 2
அங்கு வீற்றிருக்கின்ற இறை சக்தியைச் சிவம் எனும் பரம்பொருளாகவே எண்ணுமாறும் கூறுகிறது.
It calls on them to hold the divine power enthroned there to be the Supreme called Sivam.
- வரி 3Line 3
இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே பணிந்து தொழுது வணங்குமாறு கூறுகிறது; அவ்வாறு வணங்கியபின்,
It calls on them to praise and glorify God, singing and bowing in worship; and after such worship,
- வரி 4Line 4
அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் இறை சக்தியும் வணங்கித் தொழுத பக்தர்களோடு ஒன்றாகச் சேர்ந்து, அந்தப் பக்தர்களின் நெஞ்சத்தையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு அங்கே வீற்றிருக்கும் என்று பாடல் கூறுகிறது.
the verse declares that the divine power enthroned in the temple joins as one with the devotees who have bowed and worshipped, takes their very hearts as the temple it desires, and comes to dwell there.
திருமந்திரம் பாடல் #1445





