திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1450

தொடர்ந்து படிக்கread this section continuously

சமயம் பலசுத்தி தன்செய லற்றிடுமமையும் விசேடமு மரன்மந்திர சுத்திசமய நிருவாணங் கலாசுத்தி யாகுமமைமன்னு ஞானமார்க் கம்மபி டேகமே.

உரை

சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட பலவிதமான கோயில்களுக்குச் சென்று அவற்றைச் சுற்றி வந்தால், தன்னுடைய முயற்சியால் எல்லாச் செயல்களும் நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கி, அனைத்தும் இறைவனாலேயே நடக்கின்றது என்ற எண்ணம் வந்துவிடும். அதன்பிறகு அந்தக் கோயில்களில் அமைந்திருக்கும் சிறப்பானதும் பாதுகாக்கக் கூடியதுமான மந்திர உச்சாடனங்கள் தம்மைத் தூய்மைப்படுத்திவிடும். அதன் பயனால் சமயம் என்று சொல்லப்படும் எந்த விதிமுறைகளும் அதைச் சார்ந்த எண்ணங்களும் நீங்கும்படி அறிவைச் சுத்தம் செய்துவிடும். அதன்பிறகு தம்முடைய சுத்தமான அறிவில் இறைவனை நிலைபெறச் செய்து, இறையருளால் பெற்ற ஞானத்தின் வழியில் தாம் செய்யும் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார்.

வரி வாரியாக

  • வரி 1

    சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட பலவிதமான கோயில்களுக்குச் சென்று அவற்றைச் சுற்றி வந்தால், தன்னுடைய முயற்சியால் எல்லாச் செயல்களும் நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கும்.

  • வரி 2

    அதன்பிறகு, அந்தக் கோயில்களில் அமைந்திருக்கும் சிறப்பானதும் பாதுகாக்கக் கூடியதுமான மந்திர உச்சாடனங்கள் தம்மைத் தூய்மைப்படுத்திவிடும்.

  • வரி 3

    அதன் பயனால், சமயம் என்று சொல்லப்படும் விதிமுறைகளும் அவற்றைச் சார்ந்த எண்ணங்களும் நீங்க, அறிவு சுத்தமாகிவிடும்.

  • வரி 4

    அதன்பிறகு, இறையருளால் பெற்ற ஞானத்தின் வழியில், தாம் செய்யும் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார்.

திருமந்திரம் பாடல் #1450

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout