அருளும் அரசனும் ஆனையும் தேரும்பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்மருளும் பினையவன் மாதவ மன்றே.
இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டாமயக்கற நாடுமின் வானவர் கோனைப்பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.
தன்னது சாயை தனக்குத வாதுகண்டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்ததுகண்ணது காணும்ஒளி கண்டுகொ ளீரே.
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்ஓட்டித் துரத்திட் டதுவலி யார்கொளக்காட்டிக் கொடுத்துஅது கைவிட்ட வாறே.
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதேமாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்கூற்றன் வருங்காலில் குதிக்கலு மாமே.
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனேகவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.
வாழ்வு மனைவியும் மக்கள் உடன்பிறந்தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்மேவு மதனை விரிவுசெய் வார்கட்குகூவுந் துணையொன்று கூடலு மாமே.
வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கில்லைபூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பதுநாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்காட்டிக் கொடுத்துஅவர் கைவிட்ட வாறே.
உடம்பொ டுயிரிடை விட்டோடும் போதுஅடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்சுடும்பரி சத்தையும் சூழகி லாரே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #168
1 / 9




